செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பாலென காதல் பொங்கும் | கவிதை | குடந்தை பரிபூரணன்

பாலென காதல் பொங்கும் | கவிதை | குடந்தை பரிபூரணன்

1 minutes read

முன் புற மாடி வீட்டின்
முன்றலில் ஓர் இ ளைஞன்
மின் கதிர் பார்வை யாலென்
மீன் விழி துடிக்கச் செய்வான்

அன் புறப் பார்த் தென் மேனி
அழகினை மாந்து கின்றான்
இன்புறும் மெளன கீதம்
இதயத்தில் மீட்டு கின்றான்

  • * * * * * * * * * * * * * *

கள்ளமாய்ச் சிரிக்கும் போதும்
கதவோரம் நிற்கும் போதும்
உள்மன வீணை மீட்டி
உடலெங்கும் இன்ப நாதம்
வெள்ளமாய்ப் பெருகும் மார்பு
விம்மியே தணியும், நெஞ்சில்
முள்ளென ஏதோ ஒன்று
மேல்நின்று கீழ் இ றங்கும்

  • * * * * * * * * * * * * * * * * *

அடிக்கடி கனவு தோன்றும்
ஆயிரம் எண்ணம் மோதும்
துடிக்குமென் இதழ்கள் சொல்ல
நாணமோ தடை வி திக்கும்

படிக்காதப் பாடம் ஒன்று
பன்முறை நெஞ்சில் தோன்றி
அடிக்கடி ஏதோ கூறி
அலையென மோதிச் செல்லும்

  • * * * * * * * * * * * * * * * * *

விடிந்ததும் கோலம் போடும்
வேளையும் பொழுது சாய்ந்து
முடிந்ததும் கதவை மூடும்
முன்னிரா வரையும் இங்கே
கடந்திடும் கணம் ஒவ் வொன்றும்
கன்னியின் மனதில் இன்பம்
படிந்திடச் செய்யும் நெஞ்சில்
பாலெனக் காதல் பொங்கும்!

குடந்தை பரிபூரணன்

நன்றி : தேன்சிட்டு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More