செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தீபச்செல்வனின் சயனைட் நாவலுக்கு இலண்டனில் அறிமுக நிகழ்வு இன்று!

தீபச்செல்வனின் சயனைட் நாவலுக்கு இலண்டனில் அறிமுக நிகழ்வு இன்று!

1 minutes read

ஈழத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஜூன் 15ஆம் நாள் – இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை இலண்டனில் இடம்பெறவுள்ளது.

ஐந்து சமூக இலக்கிய அமைப்புகள் இணைந்து நடாத்த ஐந்து நிறுவனங்கள் அனுசரணை வழங்க சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு இலண்டனில் பிரமாண்ட அரங்கில் இடம்பெறவுள்ளது.

கடந்த சனவரி 03ஆம் நாள் சென்னையிலும் கடந்த மார்ச் 29ஆம் நாள் கிளிநொச்சியிலும் வெளியீடு கண்ட பெருங்களங்கள் கண்ட ஈழத்தளபதியின் கதையான தீபச்செல்வனின் சயனைட்
எழுச்சியும் வீழ்ச்சியும் கண்ட ஈழத் தமிழ் வரலாறு குறித்த நாவல் ஆகும்.

நிஜக் கதையை தழுவிய வீரகாவியத்தின் துயரமாக அமையப்பெற்ற இந்த நாவல் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு இடையில் மறுபதிப்பையும் கண்டு வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், இலண்டனில் Alperton Community School, Ealing Road, HA0 4PH (Next to Alperton Underground Station) எனும் முகவரியில் திருமதி மாதவி சிவலீலன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் நாவல் குறித்து பா. நடேசன்,  ரஜிதா சாம், சக்திவேல், மயூரன், சுகுணா, ஆனந்தி, துவாரகி,  மிதுனா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More