செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் வவுனியாவில் மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடு

வவுனியாவில் மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடு

1 minutes read

வவுனியாவில் மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.  நேற்று முந்தினம் (28.06.2025) மாலை 4 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வினை வவுனியா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

ஊடகத்துறை மாணவர்களின் பங்குபற்றலோடு ஊடகவியலாளர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். நிகழ்வு வவுனியா பல்கலைக்கழகம் பூங்கா வீதியில் அமைந்துள்ள அதன் அலகுகள் கற்கை கூடத்தில் நடைபெற்றிருந்தது.

பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை நெறி இணைப்பாளர் திருமதி ச. மதிவதணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை ஊடக கற்கை மாணவி பாரதியூர் சங்கீதா தொகுத்து வழங்கியிருந்தார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தியினை மதிவதணி வழங்கி வைத்து நூல் பற்றிய அறிமுக உரையினை நிகழ்த்தினார்.

ஏன் இந்த மொழிபெயர்ப்பு

மகாவம்சம் பாகம் 06 தமிழ் மொழிபெயர்ப்பு ஏன் அவசியமாகின்றது தொடர்பாக நூலாசிரியர் என் சரவணன் குறிப்பிடும் போது,
“தமிழர் விடுதலைப் போராட்டம் தொடர்பான 1978 முதல் 2010 வரையான போராட்ட கால குறிப்புக்களைக் கொண்ட இந்த நூல் உள்ளடக்த்தினை தமிழ் மக்கள் அறியும் போதுதான் அதற்காக அவர்களால் பொருத்தமான எதிர்வினையாற்ற முடியும் என்பதால் இதன் மொழிபெயர்ப்புக்கு முன்னுரிமை அதிகம் என்று குறிப்பிட்டிருந்தார்.

நினைவுப்பரிசில்

உயர்தர சானிறிதழ ஊடக கற்கை மாணவர்களுக்கான விரிவுரைகளை நிகழ்த்தியிருந்த நூலாசிரியருக்கு பல்கலைக்கழகம் நினைவுப்பரிசிலை வழங்கி கௌரவித்திருந்தது. நிகழ்வுப்பரிசினை மதிவதனி வழங்கியிருந்தார்.

இலங்கை அரசியலில் அதிக கவனமெடுத்து ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் என் சரவனண் இலங்கை அரசியல் களம் பற்றி பல பெறுமதியான நூல்களை எழுதியுள்ளதும் பல்கலைக்கழகங்களில் வருகை விரிவுரையாளாராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More