செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஏர் கலை இலக்கிய இதழ் ஓர் அறிமுகம் | கேசுதன்

ஏர் கலை இலக்கிய இதழ் ஓர் அறிமுகம் | கேசுதன்

2 minutes read

எழுத்தாளர் ஏர் மகாராசன் அவர்களால் 2015ல் ஆரம்பிக்கப்பட்ட இதழானது தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அரையாண்டு இதழாக வெளிவந்த வண்ணம் உள்ளது. சமூக மாற்றத்திற்கான உணர்வு மற்றும் தமிழ்ச் சமூகப் பண்பாட்டியல் மற்றும் அறிவுச் செயல்பாட்டுக்கான ஓர் தளமாக கொண்டு மிக முக்கியமான கருத்தியல் படைப்புக்களை ஆசிரியர் வெளிகொண்டுவருகிறார்.

வேளாண்மை. கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, தொல்லியல், சூழலியல், தமிழியல், மாற்று அரசியல், எளிய மக்களின் வாழ்வியல் அசைவுகள் என்பவற்றில் ஈடுபாடு கொண்ட ஆசிரியர் இவ்விதழினூடாக தமிழ்ச்சமூகத்திடையே பெரும் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்ற குறிக்கோளோடு ஆண்டுக்கு இரு இதழ்களை கலை இலக்கிய பதிவுகளால் சிறப்பிக்கின்றார். அரையாண்டு பருவத்தின் இதழாக (ஜூலை – டிசம்பர் 2025) வெளிவருகிறது ஏர் இதழ்.

நேர்காணல்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் மற்றும் நூல் மதிப்புரைகள் போன்ற பல்வேறு இல்கிய வடிவங்களை உள்ளடக்கி, தமிழ் சமூகத்திற்கான அறிவுசார் உரையாடலை கடத்திச்செல்கிறது இதழ்.

இதழ் உள்ளடக்கம்:

வாழ்த்துச் சொற்கள்.
– பாவலர்கள் காசி ஆனந்தன் மற்றும் அறிவுமதி.

படைப்புகள் நிலத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்க வேண்டும்: சோ.தர்மன் நேர்காணல்.
– பா.ச.அரிபாபு.

தமிழகப் பள்ளிக்கூடங்கள்: அதிகாரம் – கண்டிப்பு – தண்டனை.
– பூவிதழ் உமேஷ்.

தமிழ் ஓலைச்சுவடிகள்: திட்டமிட்ட அழிப்பு எதற்காக?
– நாக.இளங்கோவன்.

கள்: தடை நீக்குவதற்கான போராட்டங்களும் அதன் மீதான விமர்சனங்களும்.
– லிங்கம் தேவா.

‌தமிழரின் பூர்வீகப் பகுதிகளைத் தன்னாட்சி (யூனியன்) பிரதேசமாக
மாற்ற வேண்டும்.
– ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.

கல்வியில் போதாமைகள்: பெற்றோர்கள்-குழந்தைகள்- பள்ளிகள்-ஆசிரியர்கள்.
– சு.உமா மகேஸ்வரி.

பஞ்சமி நிலம்:
ஒரு வரலாற்றுப் பார்வை.
– குணா

வெள்ளாமை – சிறுகதை
– மு.மகேந்திர பாபு.

மரபுவழி உற்பத்தியும் மேய்ச்சல் தொழிலும்.
– கதிர்நம்பி.

ஈழ நிலமும் தாய்மன நினைவுகளும்.
– மகாராசன்.

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாகக் குரல் உயர்த்துவோம்.
– அருண் முத்துநாயகம்.

நாவிதர் சமூக வாழ்வும் ஆற்றுநீர்ப் போக்கும்.
– மு.அம்சம்.

கங்கும் நெருப்பும்: வழக்காறுகளும் பதிவுகளும்.
– மா.ச.இளங்கோமணி.

கிடை இதழ் – அறிமுகம்.
– வெற்றிச்செல்வன்.

கண்ணாமூச்சி – சிறுகதை
– தங்கேஸ்.

அபூர்வமான நிலவியலும் அதிசயமான மானுடரும்.
– சா.தேவதாஸ்.

செம்பச்சை நூலகம் – அறிமுகம்.
– மகாராசன் – அம்சம்.

சில்லறைக் காசுகள் – சிறுகதை.
– அய்யனார் ஈடாடி.

குமரிக்கண்டத் தமிழரின் தொன்ம வரலாறு.
– மு.களஞ்சியம்.

‌‌ஓ மேற்குக் காற்றே உனக்கொரு பாடல் – ஷெல்லி கவிதை மொழிபெயர்ப்பு.
– தங்கேஸ்.

‌எங்கள் ஊர்த் தோட்டங்களில் வேலிகள் இருந்தன: சூழலியல் பண்பாடும் வாழ்வியல் பின்புலமும்.
– சு.வேணுகோபால்.

தமிழ்த் திரைப்படங்களில் நிலக் காட்சிகள்.
– ச.தயாளன்.

‌ஆண் பெண் சமத்துவம் சாத்தியமே.
– அமரந்த்தா.

குமார் அம்பாயிரம்: திணை நிலத்தின் மேய்ச்சல்காரன்.
– யவனிகா ஸ்ரீராம்.

கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் விளிம்புநிலை மனிதர்கள்.
– ந.இரத்தினக்குமார்.

பண்பாடுகளை மறுவாசிப்புச் செய்யும் பெண் தொன்மங்கள்.
– இரா.வெங்கடேசன்.

தமிழ்ப்பேழை: ஒருங்கிணைந்த மின்னகராதியின் எதிர்காலவியல்.
– தமிழ்ப்பரிதி மாரி.

வர்மப் பொன்னூசி: சித்த மருத்துவத் தொன்மையும் மடைமாற்றமும்.
– அருள் அமுதன்.

பழங்குடிகளின் நாளை மற்றுமொரு நாளே!
– டி.தருமராஜ்.

தஞ்சைப் பெரியகோவில்: நுட்பமும் மொழியும்.
– மா.மாரிராஜன்.

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் – நூல் பரிந்துரை.
– சீமான்.

‌கவிதைகள்:
சி.மோகன் | தீபச்செல்வன் | வெய்யில் | கூடல்தாரிக் | பித்தன் கனவன் | செ.தமிழ்நேயன் ‌| கோமதி | இளையவன் சிவா | அரங்க மல்லிகா | மகாராசன் | சாத்தன் குன்றன் | நெகிழன் | இராசரத்தினம் கேசுதன்.

முதன்மை ஆசிரியர்:
மகாராசன்.
ஆசிரியர் குழு:
பா.ச.அரிபாபு,
தமிழப்பரிதி மாரி,
அய்யனார் ஈடாடி,
மு.மகேந்திர பாபு,
அ.ம.அங்கவை யாழிசை, செ.தமிழ்நேயன்.
பதிப்பாளர்:
அ.ம.அங்கவை யாழிசை.
வடிவமைப்பு:
நெகிழன்.
முகப்போவியம்:
இயல்.
இதழ் அளவு 18X24 செ.மீ
(டபுள் கிரவுன்),
பக்கங்கள் 224,
விலை உரூ 300/-
இதழ் பெற :
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு,
பேச: 9080514506

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.