செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் என் கவிதைகள் | வசந்ததீபன்

என் கவிதைகள் | வசந்ததீபன்

0 minutes read

என் வார்த்தைகள் எனது முன்னோர்களின் ரத்தம்
என் கனவுகள் மூதாதையர்களின் ஆன்மா
என் கவிதைகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் துண்டிக்கப்பட்ட நாக்கு
தேசப்படத்தில் நிராயுதபாணிகளின் ரத்தம்
துயர இழைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது காலம்
அராஜகத்தின் கன்னிவெடிகளுக்குள் சிக்கியிருக்கிறது எம் வாழ்வு
பிரார்த்தனைக் கூடம் மூடப்பட்டிருக்கிறது
கண்ணீரில் கரைகிறேன்
நிசப்தத்தின் சங்கீதம் அதிகாலைச் சூரியனாய் எழுகிறது
தூரத்துக் கடலிருந்து சூரியன் எழுந்து வருகிறான்
வானம் நீலப்பளிங்காய் மிளிர்கிறது
கூழாங்கற்கள் சிதறிக்கிடக்கும் கரையில் இலைகளற்ற மரம்
கரையொதுங்கி இருக்கிறது படகு
கருமேகங்கள் திரள்கின்றன
அலையற்ற நீரில் மலைப்பசுமை புகைப்படமாய் படிகிறது
பூமரக்கிளையில் இரு வெண் புறாக்கள்
ஒன்று தலையை கோதிட
மற்றொன்று கவிழ்ந்து அதன் தாடையை நீவுகிறது
பூக்கள் புறாக்களின் மீது சொரிகின்றன.

வசந்ததீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.