18
கடதாசியில் போராடிய
ஊடக போர்வீரன்
கடைசிவரை ஊடகனாய்
தடையுடைத்த சமராடி
கூட்டமைப்பை உருவாக்கி
காட்டியவன் தராக்கி
தமிழ்நெற்றின் பிரம்மா
தமிழ்பற்றின் தர்மா
கொல்லுகிறதையா
உன் இழப்பு
கறுப்பு மனிதனின்
நெருப்பு வரிதான்
தெறித்துப் பாய்ந்தது
சீறிய பேனாவால்
தாள்யுத்தத்தால் தாக்கிய
தராக்கி சிவராம்
தாழ்பணிகின்றோம்
தமிழர்களாய் தலைசாய்த்து
ஆண்டு 21 ஆனாலும்
நீதி கிடைக்காமல்
நீள்கிறது காலம்
இன்னும்….இன்னும்
கொல்லுகிறதையா
உன் இழப்பு.
‘ஆச்சியின் பேத்தி’ ரேணுகா உதயகுமார்