செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்  முளைக்கும் புதுநாற்று | நதுநசி

 முளைக்கும் புதுநாற்று | நதுநசி

0 minutes read

நாட்டில் நடப்பதென்ன
நாலூர் போய் வர – இருந்த
பயம் போக முன்னே
பைந்தழிழ் செழிப்பிழந்ததோ?

நெஞ்சில் உதிரம்
குமுறிப் போயும் போது
நெஞ்சுள்ள இதயம்
குற்றம் என்றெண்ணுமோ?

வல்லார் இவரென்று
மெல்லோர் தெரிந்து
பாராளும் மன்றிற்கு
சென்றுவர வாழ்த்திவிட.

அபிவிருத்தி கூட்டம்
குளறுபடி ஆவதேனோ?
கேட்ட கேள்விக்கு அங்கே
கொதித்துப் பொங்குவதேனோ?

என்ன கேள்வெனினும்
எண்ணியபடி கேட்டால்
நின்று நிதானமாக அவரவர்
சொல்லிட வேண்டும் பதில்.

புத்திசாலிகள் கூடிய அரங்கு
புத்திகெட்டு நடப்பது ஏனோ?
புதிர் போட்டா ஒரு கேள்வி
கேட்டாலும் புரிதல் வேண்டுமே!

ஈழம் கெட்டு ஆகிறதோ
கட்டிச் சுவராக தாயகத்தில்.
தாயிருந்தும் ஏனென்று
கேட்காத சேய் போல் வாழவோ?

தகவலறியும் சட்டம்
வழியில் ஒரு உண்மை.
சபைமுன்னே வந்திடின்
சினத்தோடு சீறிவது சரியோ?

பொய்யென்று சொல்ல
முன்னே கேட்க வேண்டும்
அது என்னவென்று. – அவற்றை
விளக்க மறுக்கும் ஊடகம்.

புலம்பெயர்ந்து தமிழர்
தாயகம் செழித்திட
சிந்திய வியர்வையும்
வீணாகிப் போவதோ?

குறுகுறுக்கும் குற்றம்
தவிர்த்து தரையில்
முளைக்கும் புதுநாற்று.
பெருமரமாக்கிட ஒன்றாகும்.

விடிவெள்ளி வானில்
தோன்றிடத் தெரிந்திடும்.
நாளை உலகில் ஒரு ஈழம்
நன்றே மலர்ந்திட வேண்டும்.

 நதுநசி

புகைப்படம் – தீபச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.