March 31, 2023 7:53 am

நல்ல கதைகள் நல்ல சமுதாயத்தை உருவாக்குகின்றன | பா.உதயன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கற்க என்று சொன்னான் வள்ளுவன். எதுவாக இருந்தாலும் முதலில் நீ படி என்று சொன்னான் வள்ளுவன். அத்தோடு நிறுத்தாமல் அதை விளங்கவும் தெரியவும் தேடவும் ஆளமாக கல் என்று சொன்னான். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. நீங்கள் எழுதுவதும் சொல்லுவதும் சமூகங்களுக்கு போய் சேர்கின்றன. ஒரு சமுகத்தின் கூட்டுக்களாக நின்று நாம் சொல்லுபவைகளை சமூகம் கேக்கிறது. அது பின் எமக்கு சரியோடும் பிழையொடும் திருப்பி தருகிறது. நீயே இந்த சமூகத்தை உருவாக்கிவிட்டு நீயே இந்த சமூகத்தை குறை கூறுவதில் பயனில்லை.

பொதுவாக தமிழ் சமுதாயதிலே ஒருவரை ஒருவர் குறை கூறுவதும் தம்மை தாமே குறைவாக எண்ணுவதும் தம் அடையாளங்களையும் மறந்து போபவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு ஆங்கிலேயனோ ஒரு நோர்வீயனோ ஒரு இந்தியனோ தன்னையும் தன் தேசத்தையும் நேசிக்கிறான். நாங்கள் நாங்களாகவே இல்லாமல் போனால் நாளை நம் சந்ததி எல்லாமே தொலைந்த சமூகமாகிப் போவோம். நாங்கள் எங்களை தொலைக்காமல் இருப்பதற்கு தானே எம் உரிமைக்காக போராடுகிறோம். அவர்கள் சொன்னபடி கேட்டு வாழலாம் என்றால் நாம் அவர்களாகவே தான் இருக்க முடியும் நாம் நாமாக இருக்க முடியாது. பின்பு எதற்காக தமிழர் உரிமை தமிழர் தேசம் தமிழர் அடையாளம் என்று பேசுகிறோம்.

எல்லாமே சரியாகவோ அல்லது பிழையாகவோ இருக்கும் என்பதல்ல. இருந்த போதும் உனதும் நீ வாழும் சமூகத்தின் முன்னேற்றம் விடுதலை அடையாளம் சார்ந்து பொறுப்புகளுடனும் அக்கறையுடனும் ஓர் தெளிவான பார்வை எமக்கு வேண்டும். சில வேளைகளில் எந்த விளக்கமோ தெளிவோ இல்லாமல் அதன் கருத்தோ எதுகுமே புரியாதது ஒருவரை ஒருவர் வெறுப்போடு பார்க்கிறோம். அவர் அவர் பாட்டுக்கு பேசுகிறோம் எழுதுகிறோம். சில சமயங்களில் அனுபவமும் ஆற்றலும் கொண்ட பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என தம்மை கூறிக் கொள்பவர்கள் கூட தம்மை மட்டுமே புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டு தவறான சில பார்வைகளோடு எழுதி வருவதை பேசி வருவதை சமூக வலை தளங்கள் மூலம் பார்க்கிறோம்.

வள்ளுவன் சொன்னது போல் ஐந்து சொற்களில் அழகாக சொல்லி விடுவான் அறிவுடை ஞானம் கொண்ட மனிதன். ஒரே ஒரு சொல்லில் காட்டையும் கடலையும் கட்டி வந்து கையில் தந்து விடுவான் பாரதி. ஆனால் சிலர் தமக்கே எல்லாம் தெரிவதுபோல் ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் அவர் சொன்னது எதுவென்று கூட தெரியாமல் இருக்கும். எதனை எழுதுகிறாய் எத்தனை புத்தகங்களை எழுத்துகிறாய் என்பதல்ல பெரிது. உன் எழுதினாலும் பேச்சினாலும் எத்தனை போர் நன்மை அடைகிறார்கள் சிந்திக்கிறார்கள் அதில் இருந்து எதை தேடுகிறார்கள் தேடியதில் இருந்து மீண்டும் எந்தக் கருத்தை உருவாக்குகிறார்கள் என்பதே முக்கியம். புத்தகங்களினால் மட்டும் நாம் அறிவை தேடி விட முடியாது வீதியில் மக்களிடம் இருந்து அவர்கள் எதை பேசுகிறார்கள் எதை விரும்புகிறார்கள் எதை தேடுகிறார்கள் என்பதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எவன் ஒருத்தன் பெயர்க்காகவும் புகழுக்காகவும் வாழும் படைப்பாளி ஆகுறானோ அப்பொழுதே அவனும் அவனது படைப்புகளும் காணமல் போய் விடும்.

பெருமை புகழுக்காக பொய்களையும் பிழையான நச்சுக் கதைகளையும் மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். If You want to poison a people you want to poison their stories. சிற்பி ஒரு சிற்பத்தை செருக்கும் போது அதே சிந்தனையோடு அந்த சிற்பத்தோடு மட்டும் பேசியபடி அழகிய சிற்பத்தை வடிக்கிறான். அதே போல் தான் எழுத்தாளனும் தான் சொல்லும் கதைக்கு உயிர் கொடுக்க வேண்டுமானால் அதற்குள் உண்மை இருக்க வேண்டும். ஆகவே நல்லதைப் பேசுங்கள் நல்லதை எழுதுங்கள் எல்லோரும் விளங்க எழுதுங்கள் எழுத்தும் பேச்சம் இல்லாவிடில் நீயும் ஊமை இந்த உலகும் ஊமை. ஆகவே முதலில் கற்றுக் கொள்ளுங்கள் தேடுங்கள் எழுதுங்கள் நல்லதைப் பேசுங்கள் எல்லோரும் விளங்க எழுதுங்கள். மனிதர்க்காகவும் மானிடத்திற்காகவும் அதன் வாழ்வுக்காகவும் எழுதுங்கள் பேசுங்கள்.

Speak and write quietly and clearly

பா.உதயன் 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்