
யோகா மற்றும் பிராணயாமா
யோகாசனம் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் பெரிய அளவில் நோயை எதிர்க்கும் ஆற்றலை உருவாக்குகிறது. மேலும் சுவாசப்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைத்து எல்லா உயிரணுக்களிலும் தூய காற்று உட்செல்ல உதவுகிறது. தனுராசனம்(உடம்பை வில்லாக வளைத்தல்) சிரசாசனம்(தலைகீழாக நிற்றல்) போன்ற ஆசனங்கள் நமது நிணநீர் நாளங்கள்(Lymphatic System) வழியாக, குருதியோட்டத்தை அதிகரித்து, உடலில் காணப்படுகின்ற நச்சுப்பொருட்களை அகற்றுகிறது.
மேலும் வெள்ளை ரத்த அணுக்களின் சுழற்சிக்கும் உதவுகிறது. நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க செய்வதில் உத்ராசனம், ஹலாசனம், புஜங்காசனம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
முறையான தூக்கம்/ ஓய்வு
இரவு நேரங்களில் சரியாக உறங்காதவர்களை ‘ராக்கோழி’என்ற பெயரால் குறிப்பார்கள். என்னடா! இது நோயை எதிர்க்கும் ஆற்றலைப் பற்றி கூறிக்கொண்டு இருக்கும்போது தொடர்பே இல்லாமல், வேறொரு செய்தி இடம் பெறுகிறதே என்று நினைக்க வேண்டாம். தொடர்ந்து படியுங்கள்… உங்களுக்கு மெல்லமெல்ல புரியும். காற்றோட்டமான இடத்தில் எந்தவித இடையூறு இல்லாமல் நிம்மதியாக தூங்கும் வழக்கம் உள்ளவர்களின் நோய் எதிர்ப்புத்திறன் அடிக்கடி புதுப்பிக்கப்படும். போதுமான தூக்கம் இன்றி அவதிப்படுபவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல் தானாகவே குறையும். எனவே, நோயை எதிர்க்கும் திறனை அதிகரிக்க, தொந்தரவு அற்ற போதுமான நித்திரை(குறிப்பாக இரவு நேரங்களில்) மிகமிக அவசியம்