குளிப்பது என்றால் என்ன வைத்தியரின் அறிவுரை

அதிகமாக இப்போது மக்கள் குளிக்கும் போது பல விடயங்களை கவனிப்பது இல்லை இது தொடர்பில் வைத்தியர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

குளிப்பது என்பது தலையின் கீழ்ப்பகுதியை மட்டும் நீரில் நனைத்து விடுவது அல்ல, பலர் குளித்தேன் என்று இதனையே சொல்வார்கள். குளிப்பது என்பது சிரசு நனைத்து நன்றாக குளிப்பதையே பொருள் படுத்தும் இவ்வாறு செய்யும் போது தான் நமது உடல் சூட்டை முழுமையாக நீக்க முடியுமாம்.

இதை விடுத்து நாம் முண்டம் மட்டும் குளித்து விட்டு உடல் சூட்டால் அவதிப்படுவதுடன் பல நோய்களையும் சேர்த்து கொள்கின்றோம்.

வாரத்தில் குறைந்தது 2 முறையாவது தலை நனைய குளிக்க வேண்டியது மிக அவசியம் மேலும் எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலின் தலைமுடி முதல் பாதத்தின் நுனி வரை எண்ணெய் நன்றாக தேய்த்து இளம் சூட்டு நீரில் குழப்பத்தையே குறிக்கும்.

முன்னோர் காலங்களில் அருவிகள் , குளங்கள் ,ஓடைகள் போன்ற நதி நிலையில் மக்கள் குளித்து வந்தனர் இது அவர்களின் ஆரோக்கியத்தை மிக நன்றாக பேண உதவியது. ஆனால் இப்போது மக்கள் மாடி வீடு ,அப்பாட்மென்ட்களில் வசிப்பதனால் 1 பக்கெட் தண்ணீரில் குளிப்பது ஆரோக்கியத்திற்கு மிக கேடு விளைவிக்கும் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

ஆசிரியர்