இலண்டனில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு இலண்டனில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு

லண்டனைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பன்னாட்டு தமிழ் ஊடகவியலாளர்கள் வலையமைப்பான சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் தமது 2014ம்ஆண்டிற்கான மாநாட்டினை `இலங்கைத் தீவின் போருக்கு பிந்திய காலத்தில் ஊடகங்களின் நிலை’ என்றதலைப்பில் கடந்த சனிக்கிழமை நடாத்தியிருந்தது.

காலை ஓன்பது முப்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை முழுநாள் நிகழ்வாக வெஸ்ற் லண்டன் பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் (West London University, Main auditorium, St Mary’s Road, Ealing, London, W5 5RF) நடைபெற்ற இம்மாநாட்டில் உலகின் பலபாகங்களில் இருந்து ஊடகத்துறையினரும், கல்வியாளர்களும் கலந்து கொண்டனர்.

`பயங்கரவாதத்திற்கு ஏதிரான போர்’ எனக்குறிப்பிடப்படும் ஒரு யுகத்தில், இலங்கைத்தீவின் போருக்கு பின்னரான காலத்தில், ஜனநாயகத்தை ஏற்படுத்துதல் தொடர்பான கருத்துப் பரிமாறாலாக அமைந்த இம்மாநாட்டில் மேற்படி விடையத்தால் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்வது, சர்வதேச மனிதவுரிமை நியமங்களை இலங்கைத்தீவில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி ஆழமாக ஆராயப்பட்டுள்ளது.

 

photo 2 (2)

iataj-adv

ஆசிரியர்