செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஔவையாருக்கு பிரம்மாண்ட விழா எடுத்தது மட்டக்களப்பு

ஔவையாருக்கு பிரம்மாண்ட விழா எடுத்தது மட்டக்களப்பு

1 minutes read

தமிழ் வளர்த்த அன்னை என போற்றப்படும் ஒளவையாருக்கு மட்டக்களப்பில் பிரம்மாண்ட விழா நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு, கல்லடிப்  பாலத்தில் உள்ள தமிழ் பாட்டி ஒளவையின் சிலையருகில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையுடன் கதிரவன் பட்டிமன்றப் பேரவையினால் ஒளவை விழாவாக சிறப்பாக நடைபெற்றது.

கதிரவன் பட்டிமன்ற பேரவையின் தலைவர் த.இன்பராஜா தலைமையில் நடைபெற்ற நேற்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவச்சாரியார், அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சினி கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகள் அழைத்துவரப்பட்டு தமிழ் பாட்டி ஒளவையின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் யோகாசன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அத்துடன் ஒளவை விழாவினையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.