செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனாவை தடுக்க… நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளை உட்கொள்வது அவசியம்!

கொரோனாவை தடுக்க… நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளை உட்கொள்வது அவசியம்!

1 minutes read

சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட் கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த சீனா கடுமையாகப் போராடி வருகிறது.  நோய் தொற்று பரவாமல் தற்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

சோப்பு போட்டு அடிக்கடி கைக் கழுவ வேண்டும். கை மற்றும் விரல்களால் வாய், மூக்கு மற்றும் கண்களை தொடாமல் இருக்க வேண்டும். நன்றாக வேகவைக்கப்பட்ட இறைச்சி உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் முகமூடி அணிந்து செல்ல வேண்டும்.

அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இஞ்சி, பூண்டு, சோம்பு, வேர்க்கடலை, பாதாம் பருப்பு, பிஸ்தா, திராட்சை மற்றும் வைட்டமின் சி சத்துக்கொண்ட உணவுப் பொருட்களை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும், நாம் அன்றாட சமையலுக்கு தேங்காய் எண்ணையைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

இதனிடையே, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்ற வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனையை அணுகுவது அவசியம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.