பூமிக்கு அருகில் வர உள்ள வால் நட்சத்திரம்:உலகுக்கு அபாயமா??

வியாழன் கிரகத்தை விட 5 மடங்கு பெரிய வால் நட்சத்திரம் ஒன்று இந்த மாதம் இறுதியில் பூமிக்கு அருகில் வந்து செல்லும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வான்வெளி மண்டலத்தில் உள்ள உர்சா மேஜர் என்ற இடத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் மிகப் பெரிய வால் நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. வியாழன் கிரகத்தை விட 5 மடங்கு பெரிய நட்சத்திரமான இதனுள் பாறைகளும், பனிப்படிமங்களும் இருப்பதால் அதிகமாக ஒளிரும் தன்மையுடன் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வால் நட்சத்திரம் இந்த மாதத்தின் இறுதியில் இது பூமிக்கு அருகே வந்து செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பூமியிலிருந்து 72 மில்லியன் மைல் தூரத்தில் செல்வதால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறும் ஆய்வாளர்கள், டெலஸ்கோப் மற்றும் பைனாகுலர் மூலம் இதனைக் காணமுடியும் என்றும் கூறியுள்ளனர்.

ஆசிரியர்