தங்க துப்பாக்கியுடன் போதை பொருள் கடத்தல் மன்னன்.

மெக்ஸிகோவில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனிடம் இருந்து தங்கத்தால் செய்யப்பட்ட துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மத்திய மெக்ஸிகோவில் பிகடோனஸ் ((Bigotonas)) என்ற கடத்தல் கும்பல் தலைவராக எல் யூரி என்பவர் இருந்து வந்தார். எல் யூரியை பல ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த நிலையில் குறிப்பிட்ட இடத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து எல் யூரியை போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவர் தங்கத்தால் செய்து பதுக்கி வைத்திருந்த ஏ ஆர் 15 ரக துப்பாக்கியையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று கடந்த ஆண்டு பெண் தாதாவான மரியா லோபஸ் என்பவரிடம் தங்கத்தால் செய்யப்பட்ட ஏ கே 47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆசிரியர்