இலங்கையில் நேற்று மாத்திரம் 20 கொரோனா நோயாளிகள்!

இலங்கையில் நேற்றைய தினம் 20 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 17 பேர் கடற்படையினர் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் இருவர் கடற்படையினருடன் நெருங்கி செயற்பட்டவர்கள் எனவும் மற்றைய நபர் டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய 514 பேர் இதுவரையில் வைத்திய கண்கானிப்பின் கீழ் உள்ளதாகவும் 366 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் கடற்படையினர் தொடர்பிலான தகவல்களை கடற்படையினரால் சுகாதார அதிகாரிகளுக்கு வழங்காமல் உள்ளதாக கூறப்படும் தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

ஆசிரியர்