மாயமாகி போன சந்திரிக்கா! கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளாரா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அமைதியை கடைபிடித்து வருகின்றமை குறித்து பலரும் கவனம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமைதியான சந்திரிக்கா, ஹொரகொல்லவில் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பாக உள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் கடைபிடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா பரவல் காரணமாக அவர் சில மாதங்களாக கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைத்தரவில்லை.

ஹொரகொல்லவில் அவர் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளில் இந்த நாட்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்