செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நாமலின் நிலைப்பாடு மகிழ்ச்சியளிக்கின்றது! ஹிருனிகா பிரேமசந்திர

நாமலின் நிலைப்பாடு மகிழ்ச்சியளிக்கின்றது! ஹிருனிகா பிரேமசந்திர

1 minutes read

 #Kalkisai #Hirunika #Namal Rajapaksa

கல்கிஸ்சை கடற்கரை திட்டம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நிலைப்பாடு தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். நாமல் ராஜபக்ச இது குறித்து சரியான நிலைப்பாட்டை எடுத்தது மகிழச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கல்கிஸ்ஸை கடற்கரையில் கொட்டப்பட்ட மணல் முழுமையாக அடித்துச்செல்லப்பட்ட சம்பவத்தை நாமல் ராஜபக்ச நிதிக்குற்றச்சாட்டு எனவும், அது தொடர்பில் விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் செயற்பாடு குறித்து எதிர்க்கட்சி என்ற வகையில் மகிழ்ச்சியடைவதாக ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியை சந்திருக்க வேண்டும் எனவும், இது குறித்து விசாரணை நடத்துமாறு அவரிடம் கோரியிருக்க வேண்டும் எனவும் ஹிருனிகா கூறியுள்ளார்.

இந்நிலையில், தான் கூறியிருக்கும் கருத்து தொடர்பில் நாமல் ராஜபக்சவிடம் இருந்து பதிலை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.