May 31, 2023 4:43 pm

உங்களிடம் வாக்கு கேட்கும் உரிமை எனக்கு இருக்கின்றது! சசிகலா ரவிராஜ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பெண் வேட்பாளர் என்ற ரீதியிலும் தென்மராட்சியின் பிரதிநிதி என்ற வகையிலும் மக்கள் தம் விருப்பு வாக்குகளில் ஒன்றை அவசியம் எனக்கு அளிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் கீழ் பொதுத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் உள்ள தமிழரசுக் கட்சியின் சகல உறுப்பினர்களும் பங்கேற்ற தொகுதிக்கான மூலக்கிளை கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதன்போது, சசிகலா ரவிராஜ் தனது உரையில் பெண் வேட்பாளர் என்ற ரீதியிலும் தென்மராட்சியின் பிரதிநிதி என்ற வகையிலும் மக்கள் தம் விருப்பு வாக்குகளில் ஒன்றை அவசியம் தனக்கு அளிக்கும்படி வலியுறுத்துவதாகவும், அவ்வாறு கேட்பதற்கான உரிமை தனக்கு இருப்பதாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்குகளை அரசியல் ஞானத்தோடும் அரசியல் தெளிவோடும் தாம் விரும்பும் வேட்பாளருக்கு வளங்கும்படி சசிகலா ரவிராஜ் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவை சேனாதிராஜா, சசிகலா ரவிராஜிற்கானா ஒரு விருப்பு வாக்கை அளித்து பெண்கள் பிரதிநிதித்துவத்தையும் தென்மராட்சியின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

சிறீதரன் தனது உரையில், மாமனிதர் என்ற காரணத்திற்காகவும் அவர் தியாகத்தை கௌரவிப்பதற்காகவும் சசிகலா ரவிராஜை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது நம் யாவரினதும் கடமை என்றும் தெரிவித்தார்.

சயந்தன் தனது உரையில் கட்சியின் உறுப்பினர்களை, தமது தொகுதியின் வேட்பாளரான சசிகலா ரவிராஜூடன் சேர்ந்து சசிகலா ரவிராஜின் வெற்றிக்காக வேலை செய்யும் படியும் அவருக்கான ஒத்துழைப்பை வழங்கும்படியும் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்