Thursday, April 15, 2021

இதையும் படிங்க

சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக மலரட்டும்!

தமிழ் மக்களுக்கு சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலர வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சித்திரை...

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்!

பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி...

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட...

கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது!

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரருக்கு 8 வருட தடை

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹீத் ஸ்ட்ரீக்குக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) 8 ஆண்டு கால தடை விதித்துள்ளது.

முதலிடம் பிடித்தார் பாபர் அசாம்

ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான  பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆசிரியர்

தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாட்டுகளுக்கு வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் செயற்பாட்டுக்கு எதிராக வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் அது தொடர்பில் இப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைகளுடனேயே முன்னெடுக்கப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெல்லாவெளி பிரதேசசபையின் அமர்வு இன்று (திங்கட்கிழமை) காலை பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சபை அமர்வு சபையின் வழமைக்கு அமைய நடைபெற்றதை தொடர்ந்து தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக தீர்மானத்தினை முன்வைத்து தவிசாளர் சிறப்புரையாற்றினார்.

இந்த அமர்வின் போது வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் பிக்கு ஒருவர் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது உறுப்பினர்களினால் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தொல்பொருள் இடங்களை பாதுகாப்பது எனவும் தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுப்பது என்றால் தொல்பொருள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் தமிழ் ஆய்வாளர்களின் பிரசன்னத்துடன் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் சிதறிப்போயுள்ள தொல்பொருட்களை பாதுகாப்பது எனவும் இங்கு தவிசாளரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த தவிசாளர், ”விசேடமாக தொல்பொருள் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த செயலணிக்கு எதிராக சபையில் கண்டனத் தீர்மானம் ஒன்றை ஏற்படுத்தி இருந்தோம். அந்த கண்டனத்; தீர்மானத்திற்கு மாறாக எங்களது போரதீவுப்பற்று வெல்லாவெளி வேத்துச் சேனை கிராமத்தில் தனிப்பட்ட தனியார் காணியில் ஆய்வு நடவடிக்கை மேற்கொள்வதாக வந்து மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய ஆய்வுக் குழவும், இந்த செயலணியில் உட்பட்டு இருக்கின்ற பௌத்த பிக்குக்கள் இருவரும் வந்துள்ளனர்.

அப்பிரதேச மக்களுக்கோ, சபை தவிசாளருக்கோ அல்லது உறுப்பினர்களுக்கோ அறிவிக்காமல் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதால் மக்கள் பதட்டநிலை அடைந்து அச்சம் கொள்கின்றார்கள். முந்தை நாள் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெற்ற பிற்பாடு நேற்று அங்கு மக்கள் கூடியிருப்பதாக அறிந்து அங்கு சென்றிருந்தேன்.

ஆங்கு சென்று பார்கின்ற போது வேற்றுச்சேனை மக்கள் மாத்திரமல்ல, எங்களது போரதீவு பிரதேச இளைஞர்கள் பலர் கூடியிருந்து எதிர்புக்களை காட்டி இருந்தார்கள். ஆங்கு வைரவர் ஆலயமும், நாகதம்பிரான் ஆலயமும் தனிநபர் காணியில் அமைந்து காணப்படுகின்றது.

அந்த காணியினுடைய ஒருபகுதியான ஒன்றரை ஏக்கர் காணியினை விளையாட்டு மைதானத்திற்கு கொடுத்து இருக்கின்றதாகவும் மைதானத்தில் ஸ்ரேடியம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த இடத்தில் காணப்படுகின்றது.

இந்த இடத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்றால் மக்களுடைய ஆலோசனைகளைப் பெற்று, சபையினுடைய தவிசாளர், உறுப்பினர்களது ஆலோசனைகளைப் பெற்று இப் பிரதேசத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போரதீவுப்பபற்று பிரதேசத்தினை கடந்த காலங்களில் ஆய்வு செய்த பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் ஆய்வு செய்தபோது இங்கு பல தமிழர்களின் தொல்பொருள் சின்னங்கள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளதுடன். புல ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. புல ஆண்டுகளாக தமிர்கள் இப் பிரதேசத்தில் வாழ்துவருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் நிருபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகளில் காணப்படுகின்றது.

வெல்லாவூர் கோபால், பேராசிரியர் பத்மநாதன் ஆகியோரின் ஆய்வுகள் குறிப்பாக வெல்லாவெளி விவேகானந்தபுரம், தளவாய், பாலையவட்டை, 35ஆம் கிராமம், கர்ணபுரத்திலும், களும்மந்தன்வெளி போன்ற இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு உறுதிப்படுத்தப்டிருக்கின்றது.

இப்பிரதேசங்களில் காலங்காலமாக தமிழர்கள் ஆண்டமைக்கான சான்றுகள் காணப்படுகின்றது. பேராலயங்களாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம், ஸ்ரீ சித்திரவேல் ஆலயம் காணப்படுகின்றது. இந்த ஆலங்கள் ஆரம்ப காலங்களில் இருந்து தொன்று தொட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ள எத்தணிப்பது எங்களது மக்களுக்கு மற்றும் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு அதிர்ப்தி அளிக்கின்றது. நாங்கள் கடந்த மாதத்தில் கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தின்படி இங்கு ஒன்றும் நடைபெறவில்லை. இவ்வாறான சம்பவங்கள் மனவேதனையளிக்கின்றது.

ஆங்கு காணப்படும் ஆலயத்தில் வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடைபெறுகின்றது. அதேபோல் அறுவடை காலங்களில் பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று கூட பௌர்ணமி பூஜை நடைபெற்றதை காணக்கூடிதாக இருந்தது.

இந்த பிரதேசத்தில் காணபடுகின்ற தொல்பொருள் சான்றுகளைப் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமையாகும். இவைகளை கொண்டு அருங்காட்சியம் ஒன்று அமைப்பதற்கான ஏற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளுக்கு சபையில் போதிய நிதி வசதி ஏதும் இல்லை, இந்த நிதி வசதிகளை பெறுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் யாராவது நிதி உதவி செய்ய முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன், இந்த கண்டனப் பிரேரணையினை சபை உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து ஏகமானதாக ஆதரிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க

யாழில் 25 பேருக்கு கொரோனா உறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 145 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனை முடிவுகளில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது !

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை ! !

இந்தியாவின் கொரோனா நிலை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து...

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான...

மகாராஷ்டிரா மாநிலத்தில் பொது முடக்கம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமுலுக்கு வரவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை...

தொடர்புச் செய்திகள்

சலூன்காரராக மாறிய அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமமொன்றில் தொடர்ந்து பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் காரணத்தினை அறிந்த ஆசிரியர் சலூன்காரராக மாறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு...

பெண் வைத்தியருக்கு பாலியல் தொந்தரவு | பிரதேச சபை உறுப்பினர் கைது

திருகோணமலை பன்குளம் பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் வைத்தியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம்...

வடக்கு கிழக்கு மாகாணத்தில் இம் முறை

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் கடந்த 2015 தேர்தலோடு ஒப்பிடுகையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இம் முறை வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளது. வடகிழக்கில் மட்டக்களப்பில் :...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

மேலும் பதிவுகள்

புதிய வாழ்க்கை | புதிய பயணம் | மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு செய்திருக்கிறார்.மகேந்திரன் - லோகேஷ் கனகராஜ்‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி...

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் | சம்பந்தன்

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சஞ்சுவின் சதம் வீண் | ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்

ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடி சதமடித்த போதும் இறுதியில், பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த்...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

திருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் !

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். தனது யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றை...

பிந்திய செய்திகள்

யாழில் 25 பேருக்கு கொரோனா உறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 145 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனை முடிவுகளில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சொல்ல வேண்டிய சாமுண்டீஸ்வரி ஸ்லோகம்!

சாமுண்டீஸ்வரியின் ஸ்லோகங்கள் மிக மிக வலிமையானவை. மகா சக்தி கொண்டவை. மிகுந்த வீரியம் கொண்ட சாமுண்டியை அவளின் ஸ்லோகங்கள் பாராயணம் செய்து வழிபடுவது எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்கும் என்கிறார்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.04.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் .நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து...

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

துயர் பகிர்வு