கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற வேட்பாளர்களின் கருத்துக் களம்!

 

முதல்வன் ஊடாக வலைமையப்புடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட ஊடாகவியலாளர்களின் ஒருங்கிணைப்பில் நெற்றிக் கண் நண்பர்கள் வட்டம் அமைப்பின் அனுசரணையுடன் கட்சி வேட்பாளர்களுக்கான கருத்துக்களம் நேற்று கிளிநொச்சி கூட்டுறவுச்சங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது.

2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடும் குறிப்பிட்ட சில கட்சிகளது சுயேட்சைக்குழுவினதும் பிரதிநிதிகள் இணைந்து கொண்டு தங்கள் கட்சி;க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் நிகழ்வின் கலந்து கொண்டவர்களது கேள்விகளுக்கும் விடையளித்தனர்

இந்நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சைக் குழுவின் தலைவர் திரு.பாரதிதாசன் அவர்கள், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தினை பிரதிநிதித்துவப் படுத்தும் வேட்பாளார் திரு.சுரேந்திரன் அவர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் திரு.சுகாஷ் அவர்கள், ஜக்கிய மக்கள் கட்சி வேட்பாளர் திருமதி உமாசந்திர பிரகாஸ் அவர்கள், ஜக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் விநாயகமூர்த்தி சகாதேவன் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டனியின் வேட்பாளர் திரு.சங்கையா ஆகியோர் பிரசன்னமாகி தங்கள் சார் கருத்துக்களை தெரிவித்ததுடன் மக்களது கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்

இதேவேளை இம் முறை பொதுத்தேர்தலில் யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்ட போதும் இவ் நிகழ்வில் பலர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆசிரியர்