October 4, 2023 4:00 am

ரஷிய ஜனாதிபதி புதின் விடுத்துள்ள அவசர உத்தரவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உக்ரைன் மீது ரஷியா கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டவை உதவிகளை வழங்கி வருகின்றன.

அதே சமயம் உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ரஷியா, அந்நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

இதனிடையே உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் எதிர்த்தாக்குதல் நடத்த தயார் என்று உக்ரைன் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய பகுதிக்குள் ரஷிய ராணுவம் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷிய ஜனாதிபதி புதின் உத்தரவிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்