ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள மகளிர் சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
தலைநகர் தெகுசிகல்பா நகர் அருகே தமரா பகுதியில் உள்ள இந்த சிறையில், மகளிர் மட்டுமே அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், சிறையில் உள்ள மகளிர் கைதிகள் இடையே திடீரென வன்முறை ஏற்பட்டு குழுக்களாக பிரிந்து மோதி கொண்டனர்.
இந்த சம்பவத்தில் 41 கைதிகள் மரணம் அடைந்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டில் இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் ஆண்கள் மட்டுமே உள்ள சிறைகளில் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 40 கைதிகள் உயிரிழந்தனர்.
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.