பங்களாதேஷத்தில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகள், கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மின் விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், வீதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வெள்ளத்தில், சிக்கி 59 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெனி மாவட்டத்தில் 23 பேரும், கமில்லா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்து உள்ளதுடன், 11 மாவட்டங்களில் உள்ள நகராட்சி பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களிலும் 54 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 40 இலட்சம் மக்கள் 3,900க்கும் அதிகமான நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.