செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 119ஆவது வடக்கின் சமர்: திசோன் சகலதுறைகளிலும் பிரகாசிப்பு | யாழ். மத்திய கல்லூரி 30ஆவது வெற்றி

119ஆவது வடக்கின் சமர்: திசோன் சகலதுறைகளிலும் பிரகாசிப்பு | யாழ். மத்திய கல்லூரி 30ஆவது வெற்றி

2 minutes read

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான  119ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் முரளி திசோன் சகலதுறைகளிலும் பிரகாசித்ததன் பலனாக யாழ். மத்திய கல்லூரி 3 விக்கெட்களால் மகத்தான வெற்றியை ஈட்டியது.

இந்தப் போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்ட நேர முடிவில் தோல்வியின் விளிம்பிலிருந்த யாழ். மத்திய கல்லூரியை முரளி திசோன், ஐயாதுரை கபிஷேக், ஜேசுதாசன் நிதர்சன் ஆகியோர் பொறுப்புடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடி மீட்டெடுத்து மகத்தான வெற்றியை ஈட்டச் செய்தனர்.

இப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த முரளி திசோன் 12 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியதுடன் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 81 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன் காரணமாக சென். ஜோன்ஸ் சார்பாக உதயனன் அபிஜோய்ஷாந்த் குவித்த அபார சதம் பயனற்றுப் போனது.

இந்த வெற்றியுடன் வடக்கின் சமரில் 30ஆவது வெற்றியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பதிவுசெய்தது.

எனினும் தொடரில் சென். ஜோன்ஸ் கல்லூரி தொடர்ந்தும் 40 – 30 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் குறைந்த எண்ணிக்கைகளுக்கு ஆட்டம் இழந்தன.

இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு அணிகளுமே சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்தன.

ஆனால், போட்டியின் மூன்றாவதும் கடைசியுமான இன்றைய தினம் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டெழுந்த யாழ். மத்திய கல்லூரி அபார வெற்றியீட்டி பலத்த பாராட்டைப் பெற்றது.

இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சென். ஜோன்ஸ் கல்லூரி 119 ஓட்டங்களையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 95 ஓட்டங்களையும் பெற்றன.

சென் ஜோன்ஸ் கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் 223 ஓட்டங்களைக் குவித்தது.

இதனை அடுத்து 248 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் ஆரம்பதித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வியின் விளிம்பில் இருந்தது.

இதன் காரணமாக இந்தப் போட்டியில் சென். ஜோன்ஸ் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சகலதுறை வீரர் முரளி திசோன் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்ததுடன் இரண்டு சிறப்பான இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி தனது அணியை மீட்டெடுத்து வெற்றி பெறச் செய்தார்.

இன்று காலை 6 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களிலிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 7 விக்கெட்களை இழந்து 250 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.

முரளி திசோன் 7ஆவது விக்கெட்டில் ஐயாதுரை கபிஷேக்குடன் 37 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் ஜேசுதாசன் நிதர்சனுடன் பெறுமதிக்க 97 ஓட்டங்களையும் பகிர்ந்து நாயகனானார்.

முரளி திசோன் 126 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 81 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஐயாதுரை அபிஷேக் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

மிகத் திறமையாகவும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடிய ஜேசுதாசன் நிதர்சன் 33 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் முர்ஃபின் ரெண்டியோ 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

எண்ணிக்கை சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 119 (சற்குணராஜா வினுக்ஷன் 22, முர்பின் ரெண்டியோ 19, முரளி திசோன் 39 – 5 விக்., வெலன்டைன் ஹெரிஸ் 37 – 3 விக்.)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 95 (அன்ரனிரேஷான் அபிஷேக் 23, நாகராசா சஜித் 16, கணேசமூர்த்தி கௌசிகன் 41 – 5 விக்., முர்பின் ரெண்டியோ 19 – 3 விக்.)

சென். ஜோன்ஸ் கல்லூரி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 223 (உதயனன் அபிஜோய்ஷாந்த் 121, முர்பின் ரெண்டியோ 34, சிவகுமார் ஜோன் நதேனியா 19, ஜீவா அபிசான் 18, முரளி திசோன் 78 – 7 விக்., வெலன்டைன் ஹெரிஸ் 62 – 3 விக்.),

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 248 ஓட்டங்கள்) – 250 – 7 விக். (முரளி திசோன் 81 ஆ.இ., ஜேசுதாசன் நிதர்சன் 44 ஆ.இ., கபிலன் அமலன் 44. ஐயாதுரை கபிஷேக் 21. ஜெயசீலன் ஜெனோஷன் 20, முர்ஃபின் ரெண்டியோ 65 – 2 விக்.)

சிறந்த பந்துவீச்சாளர், சகலதுறை வீரர், ஆட்டநாயகன்: முரளி திசோன் (யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த துடுப்பாட்ட வீரர்: உதயனன் அபிஜோய்ஷாந்த் (சென். ஜோன்ஸ்)

சிறந்த களத்தடுப்பாளர், சிறந்த விக்கெட்களாப்பாளர்: கிருபாகரன் சஞ்சுதன் (சென். ஜோன்ஸ்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.