செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இலங்கை,மே.தீவுகள் -இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சமநிலையில் நிறைவு!

இலங்கை,மே.தீவுகள் -இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சமநிலையில் நிறைவு!

1 minutes read

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இதன்படி இரு அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்ததால், தொடரும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

ஆண்டிகுவா மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற் இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 354 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிரைஜ் பிரத்வெயிட் 126 ஓட்டங்களையும் ராகிம் கோர்ன்வோல் 73 ஓட்டங்களையும் மேயர்ஸ் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளையும் விஷ்வ பெனார்டோ, லசித் எம்புல்தெனிய, மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 258 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, திரிமன்னே 55 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெமார் ரோச் 3 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப் மற்றும் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கெப்ரியல், மேயர்ஸ் மற்றும் பிளக்வுட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 96 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் இலங்கை அணிக்கு 377 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரத்வெயிட் 85 ஓட்டங்களையும் ஹோல்டர் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களையும் மேயர்ஸ் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், லக்மால் மற்றும் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 377 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, போட்டியின் இறுதிநாளான நேற்றுவரை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, திமுத் கருணாரத்ன 75 ஓட்டங்களையும் ஒசேத பெணார்ன்டோ ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக கிரைஜ் பிரத்வெயிட் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக சுரங்க லக்மால் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.