பெல்ஜிய அணியின் தோல்வியால் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்

பெல்ஜியம் அணி வீரர்கள் நேற்றைய தினம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை தகர்த்தனர் . இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற ரசிகர்கள் நாட்டின் சொத்துக்களை அடித்து உடைத்து தொம்சம் செய்து வருகின்றனர்.

22 வது உலகக்கோப்பை கால்பந்தாட்டம் பணமழை பெய்யும் கட்டாரில் நடைபெற்று வரும் நிலையில் 32 நாடுகள் 8 போட்டிகள் என்று சுழற்சிமுறையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் குரூப் -f பிரிவில் மொராக்கோ பலமான பெல்ஜியம் அணிகள் நேற்றைய தினம் மோதியது அதில் பெல்ஜியத்தை இலகுவாக மொரோக்கோ தோற்கடித்தது.

ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக மொரோக்கோ அணி செயற்பட்டது இரண்டாம் பாதியில் பேயாட்டம் ஆடிய மொரோக்கோ 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த பெரும் பெல்ஜியத்தின் தோல்வியால் கொந்தொளித்த ரசிகர்கள் கடைகள் உடைத்து வாகனங்களை தீக்கிரையாக்கி கலவரத்தில் ஈடுப்பட்டனர். கையில் கட்டை ,கம்பு என்று ஆயுத்தங்களுடன் பலர் வன்முறை செயல்களில் ஈடுபட்டனர்.

அடுத்த போட்டியில் பெல்ஜியம் குரோஷியா அணியுடன் மோதவுள்ளது.

ஆசிரியர்