கால்பந்தாட்ட மன்னன் பெலே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கால்பந்தாட்டத்தின் கடவுள் என ரசிகர்களால் போற்றப்படும் பெலே என்பவர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் அறிக்கை வெளியிட்டுள்ளார் .

யார் இந்த பெலே ? பிரேசில் மக்களால் கொண்டாடப்படும் கதாநாயகன் 1956 இல் கால்பந்தாட்ட போட்டிக்குள் பிரவேசித்த இவர் 1974 ஆம் ஆண்டு வரை தனது கடுமையான முயற்சியால் 6 பிரேசில் லீக் பட்டங்களையும் 2 கோப்பை லிபர்ட்டோர் பட்டங்களையும் மூன்று முறை உலக கோப்பையையும் வென்ற பெருமைக்குரிய வீரர் ஆவார் . இவர் தனது மொத்த கால்பந்தாட்ட வாழ்க்கையில் அடித்த கோல் 643 ஆகும்.

இத்தகைய வீரர் தனது 82ஆவது வயதில் பெருங்குடல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெருங்குடலில் உள்ள ஒரு கட்டி அறுவை சிகிச்சை மூலம் அற்றப்பட்டு இப்போது கீமோதெரபி முறை சிகிச்சை வழங்கப்பட்டு அதுவும் பலனளிக்க முடியாத நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர்