செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள் | பவுமா

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள் | பவுமா

1 minutes read

27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி ஒரு ஐசிசி கோப்பையை வென்றுள்ளது. வழக்கமாக ‘chokers’ என கேலி செய்யப்படும் தென்னாப்பிரிக்க அணி இம்முறை பலமிக்க ஆஸி அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் இந்த வெற்றியை இந்தியாவில் உள்ள ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா.

தென்னாப்பிரிக்காவின் பூர்வீகக் குடிகளான கருப்பினத்தைச் சேர்ந்தவரான அவருடைய உயரம் மற்றும் பேட்டிங் ஸ்டைல் ஆகியவற்றின் காரணமாக பல கேலிகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இதற்கு மேலாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையால்தான் அவர் அணியில் நீடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்களுக்கும் இந்த கோப்பையை வென்றதன் மூலம் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் போட்டியின் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களை ‘chokers’ என சொல்லி ஸ்லெட்ஜ் செய்ததாக பவுமா தெரிவித்துள்ளார். வழக்கமாக ஆஸி அணி வீரர்கள் தங்கள் ஸ்லெட்ஜிங்குக்காக புகழ் பெற்றவர்கள். இதுபோன்ற வார்த்தைகளைப் பேசி எதிரணியினரை சீண்டுவதில் வல்லவர்கள் என்பது கிரிக்கெட் உலகம் அறிந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More