செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ராஜ்குமார் அதிரடி அரைசதம்: கோவை வெற்றிபெற 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி

ராஜ்குமார் அதிரடி அரைசதம்: கோவை வெற்றிபெற 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி

1 minutes read

மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

டி.என்.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி சேலத்தில் நடைபெறுகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி, திருச்சி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வசீம் அகமது 32 ரன்னில் அவுட்டானார். ஜகதீஷ் கவுசிக் 5 ரன்னில் வெளியேறினார். சுஜய் சிவசங்கரன் 25 ரன்னும், ஜாபர் ஜமால் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சஞ்சய் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் இறங்கிய ராஜ்குமார் அதிரடியாக ஆடி 18 பந்தில் அரை சதம் கடந்தார். 17வது ஓவரில் 21 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. ராஜ்குமார் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More