செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் ஷன்டோ

டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகினார் ஷன்டோ

1 minutes read

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0 – 1 என்ற ஆட்டம் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து பங்களாதேஷ் டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ விலகிக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தனது முடிவை ஷன்டோ அறிவித்தார்.

அப் போட்டியில் இலங்கையிடம் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் பங்களாதேஷ் தோல்வி அடைந்தது. ‘இதற்கு மேலும் டெஸ்ட் அணித் தலைவர் பதவியில் தொடர நான் விரும்பிவில்லை’ என்றார் ஷன்டோ.

‘இது எனது தனிப்பட்ட நலனுக்காக எடுத்த முடிவல்ல. அணியின் நலனையும் முன்னேற்றத்தையும் கருத்திக்கொண்டே நான் இந்த முடிவை எடுத்தேன். முன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு மூன்று தலைவர்கள் இருப்பது பொருத்தமல்ல. எமது கிரிக்கெட் சபை இது குறித்து என்ன நினைக்கும் என எனக்கு தெரியாது. சபையின் தீர்மானத்தை ஆதரிப்பேன்’ என ஷன்டோ மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.