அவுஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 4 நாள் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ள இலங்கை ஏ அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.
ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை ஏ அணியின் தலைவராக லஹிரு உதாரவும் நான்கு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை ஏ அணியின் தலைவராக பசிந்து சூரியபண்டாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவருடன் கமில் மிஷார, நுவனிது பெர்னாண்டோ, பவன் ரத்நாயக்க, சொனால் தினூஷ, ஷிரான் பெர்னாண்டோ, இசித்த விஜேசுந்தர, மொஹமத் ஷிராஸ், ப்ரமோத் மதுஷான், வனுஜ சஹான் ஆகியோர் ஒருநாள் மற்றும் நான்கு நாள் கிரிக்கெட் குழாம்களில் இடம்பெறுகின்றனர்.
லஹிரு உதாரவும் சொனால் தினூஷவும் பங்களாதேஷுககு எதிரான தொடரில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற வீரர்களாவர். சுழல்பந்து வீச்சாளர் நிஷான் பீரிஸ் ஏற்கனவே 3 டெஸ்ட்களில் விளையாடியவர்.
அவர்களைவிட ப்ரமோத் மதுஷான், மொஹமத் ஷிராஸ், நுவனிது பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே, சமிந்து விக்ரமசிங்க, துஷான் ஹேமன்த, கமில் மிஷார, லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்களாவர்.
அவுஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக ஜுலை 4, 6, 9ஆம் திகதிகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை ஏ அணி விளையாடும்.
அதனைத் தொடர்ந்து ஜூலை 13 முதல் 16ஆம் திகதிவரை முதலாவது நான்கு நாள் போட்டியும் ஜூலை 20 முதல் 23ஆம் திகதிவரை 2ஆவது நான்கு நாள் போட்டியும் நடைபெறும்.
சகல போட்டிகளும் டார்வின் விளையாட்டரங்கில் நடைபெறும்.
இலங்கை ஏ – ஒருநாள் குழாம்
கமில் மிஷார, லஹிரு உதார (தலைவர்), லசித் குரூஸ்புள்ளே, பசிந்து சூரியபண்டார, நுவனிது பெர்னாண்டோ, பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, சொனால் தினூஷ, சமிந்து விக்ரமசிங்க, ஷிரான் பெர்னாண்டோ, இசித்த விஜேசுந்தர, ப்ரமோத் மதுஷான், மொஹமத் ஷிராஸ், துஷான் ஹேமன்த, வனுஜ சஹான்.
இலங்கை ஏ – நான்கு நாள் குழாம்
லஹிரு உதார, கமில் மிஷார, ரவிந்து ரசன்த, பசிந்து சூரியபண்டார (தலைவர்), நுவனிது பெர்னாண்டோ, பவன் ரத்நாயக்க, விஷாத் ரந்திக்க, சொஹான் டி லிவேரா, சொனால் தினூஷ, ஷிரான் பெர்னாண்டோ, இசித்த விஜேசுந்தர, அசன்க மனோஜ், மொஹமத் ஷிராஸ், ப்ரமோத் மதுஷான், வனுஜ சஹான், நிஷான் பீரிஸ்.