செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் ஓமானை வென்றது இலங்கை

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் ஓமானை வென்றது இலங்கை

2 minutes read

ஓமானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் இன்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சொந்த மண்ணில் சர்வதேச ரி20 மற்றும் ரி20 உலகக் கிண்ண  போட்டிக்கான அதிகூடிய மொத்த எண்ணிக்கையைக் குவித்த இலங்கை 105 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் இன்றைய வெற்றியுடன் இரண்டு வெற்றிகளை ஈட்டியுள்ள இலங்கை பி குழுவில் 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இன்றைய போட்டியில் சொந்த மண்ணில் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையை இலங்கை படைத்த அதேவேளை, தசுன் ஷானக்க சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கான அதிவேக அரைச் சத சாதனையை நிலைநாட்டினார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ரி20 போட்டியில் 20 பந்துகளில் அரைச் சதம் குவித்த தசுன் ஷானக்க இன்றைய போட்டியில் 19 பந்துகளில் அரைச் சததத்தைப் பூரத்திசெய்து தனது முந்தைய சாதனையைப் புதுப்பித்தார்.

ஓமானுக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது சொந்த மண்ணில் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கையின் இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

கென்யாவுக்கு எதிராக ஜொஹானெஸ்பேர்க் மைதானத்தில் 2007இல் 6 விக்கெட் இழப்புக்கு பெறப்பட்ட 260 ஓட்டங்களே சர்வதேச ரி20 கிரிக்கெட் மற்றும் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

ஆரம்ப வீரர்கள் காமில் மிஷார (8), பெத்தும் நிஸ்ஸன்க (13) ஆகிய இருவரும் மீண்டும் பிரகாசிக்கத் தவறினர். (42 – 2 விக்.)

என்றாலும் குசல் மெண்டிஸ் மூன்றாவது விக்கெட்டில் பவன் ரத்நாயக்கவுடன் பகிர்ந்த 94 ஓட்டங்களும் நான்காவது விக்கெட்டில் தசுன் ஷானக்கவுடன் பகிர்ந்த 63 ஓட்டங்களும் இலங்கையை பலமான நிலையில் இட்டது.

பவன் ரத்நாயக்க 28 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டநாயகனானார்.

தசுன் ஷானக்க பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களைக் குவித்து களம் விட்டகன்றார்.

குசல் மெண்டிஸ் 45 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று ரன் அவுட் ஆனார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இது அவரது 19ஆவது அரைச் சதமாகும்.

கமிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்களுடனும் துனித் வெல்லாலகே 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஜித்தேன் ராமானந்தி 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

226 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 20 ஓவர்களையும் தாக்குப்பிடித்து 9 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஓமான் துடுப்பாட்டத்தில் இருவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

43 வயதான மொஹமத் நதீம் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவரை விட வசீம் அலி 27 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.