செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரி20 கிரிக்கெட்: பங்களாதேஷை வீழ்த்தி இந்தியா சம்பியனானது

ரி20 கிரிக்கெட்: பங்களாதேஷை வீழ்த்தி இந்தியா சம்பியனானது

1 minutes read

ஹொங்கொங் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்றுவந்த 8 அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண எழுச்சி நட்சத்திரங்கள் (ரைசிங் ஸ்டார்ஸ்) கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனானது.

பாங்கொக் தேர்ட்தாய் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய இந்தியா 46 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனானது.

தேஜல் ஹசாப்னிஸ், அணித் தலைவர் ராதா யாதவ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 69 ஓட்ட இணைப்பாட்டம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது.

அத்துடன் ப்ரேமா ராவத், தனுஜா கன்வார் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் தேஜல்  ஹசாப்னிஸ்   51 ஓட்டங்களையும் ராதா யாதவ் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாஹிமா காத்துன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஷமிமா சுல்தான மாத்திரம் ஓரளவு திறமையை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ப்ரேமா ராவத் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தனுஜா கன்வார் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சோனியா மெந்தியா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: தேஜல் ஹசப்னிஸ்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.