செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2026 லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

2026 லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

1 minutes read

இலங்கையின் முக்கிய உள்ளூர் T20 கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் ( Lanka Premier League (LPL) ) 2026 போட்டிகள் ஜூலை 10 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Beaches & Islands

ஆறாவது தடவையாக நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடர் நான்கு முக்கிய மைதானங்களில் நடைபெறவுள்ளது:

* கொழும்பு, எஸ்.எஸ். ஸி. மைதானம் (Singhalese Sports Club Ground)

* கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானம் (R. Premadasa International Cricket Stadium)

* கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Pallekele International Cricket Stadium)

* தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம் (Rangiri Dambulla International Cricket Stadium)

இதற்கிடையில், வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்யும் இணையத்தளம் 4ஆம் திகதி திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரானது, LPL-இன் உரிமையாளரான இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் அதன் நிகழ்வு உரிமைகளை வைத்திருக்கும் IPG குழுமம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் நடத்தப்படும்.

சர்வதேச பாணியில் நடைபெறும் இலங்கையின் முன்னணி T20 லீக் தொடரான LPL, 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சமந்த தொடன்வல போட்டித் தொடரின் பணிப்பாளராக பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.