செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் தமிழ் பேசக்கூடிய வீரர்கள்

ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் தமிழ் பேசக்கூடிய வீரர்கள்

1 minutes read

சீனாவின் சன்யாவில் தற்போது நடைபெற்று வரும் ஆறாவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 77 விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.

இவ் விளையாட்டு விழாவில் 14 வகையான விளையாட்டுக்கள் நடைபெறுகின்ற போதிலும் கடற்கரை மெய்வல்லுநர் போட்டி, கடற்கரை கபடி, கடற்கரை கைப்பந்தாட்டம் (Handball), கடற்கரை கரப்பந்தாட்டம், 3 x 3 கூடைப்பந்தாட்டம், திறந்த நீர்நிலை நீச்சல், கடற்கரை மல்யுத்தம், பாய்மரப் படகோட்டம் ஆகிய எட்டு வகையான விளையாட்டுக்களிலேயே இலங்கை பங்குபற்றுகின்றது.

இவ் விளையாட்டு விழாவில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் உட்பட தமிழ் பேசும் 11 பேர் இலங்கை சார்பாக பங்குபற்றுகின்றமை விசேட அம்சமாகும்.

3 x 3 கூடைப்பந்தாட்ட ஆண்கள் அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோகானந்தன் சிம்ரன் இடம்பெறுகிறார். இவர் ஏற்கனவே வழமையான தேசிய கூடைப்பந்தாட்ட அணியிலும் இடம்பெற்ற வீரராவார்.

கூடைப்பந்தாட்ட அணியிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிலோனா கமலின் மில்ஸ், வொஷிங்டன் க்ளே எப்சிபா  ஆகிய இருவர் இடம்பெறுகின்றர். அவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் இடம்பெற்றுவருகின்றனர்.

கடற்கறை கபடி அணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீர, விராங்ககைள் ஐவர் இடம்பெறுகின்றனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விமலேந்திரன் டிலக்சனா, ராசா கஜேந்தினி, மட்டக்களப்பைச் சேர்ந்த ராசதுரை பிரியவர்ணா ஆகியோர் கடற்கரை பெண்கள் கபடி அணியிலும் கிழக்கு மாகாணத்தின் நிந்தாவூரைச் சேர்ந்த மொஹம்மத் அன்சாப், ஆபித் அக்கார் ஆகிய இருவரும் ஆண்கள் கடற்கரை கபடி அணியிலும் இடம்பெறுகின்றனர்.

இவர்கள் ஐவரும் தேசிய கபடி அணிகளில் ஏற்கனவே இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரை மெய்வல்லுநர் அணியில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம். பருத்தித்துறையைச் சேர்ந்த சுசீந்திரகமார் மிதுன்ராஜ் இடம்பெறுகிறார். இவர் தேசிய மட்டத்தில் தட்டெறிதல், குண்டு எறிதல், சம்மட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமத் நௌஷாத் கடற்கரை மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றுகின்றார்.

அத்துடன் படகோட்டப் போட்டியில் கொழும்பு மெதடிஸ்த கல்லூரியின் லைலா ஹசாரி  பங்குபற்றுகின்றார்.

Travel Guides & Travelogues

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.