செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன் டெல்ஹியை 8 விக்கெட்களால் வென்றது கொல்கத்தா

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன் டெல்ஹியை 8 விக்கெட்களால் வென்றது கொல்கத்தா

1 minutes read

டெல்ஹி அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (08) இரவு நடைபெற்ற டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றி பெற்றது.

இம்ப்பெக்ட் வீரர் பின் அலன் ஆட்டம் இழக்காமல் குவித்த அசத்தலான சதம் கொல்கத்தா நைட் ரைடர்ஸை இலகுவாக வெற்றிபெறச் செய்தது.

இந்த வருட ஐபிஎல் அத்தியாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஈட்டிய நான்காவது வெற்றி இதுவாகும்.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 143 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவர் அஜின்கியா ரஹானே (13) அங்க்ரிஸ் ரகுவன்ஷி (1) ஆகிய இருவரும் முதல் 4 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (31 – 2 விக்.)

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பின் அலன், கெமரன் க்றீன் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 64 பந்துகளில் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அலன் பின் 47 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 10 சிக்ஸ்கள் உட்பட 100 ஓட்டங்களுடனும் கெமரன் க்றீன் 2 சிக்ஸ்கள் உட்பட 33 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.

பெத்தும் நிஸ்ஸன்க, கே.எல். ராகுல் ஆகிய இருவரும் 5 ஓவர்களில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து  சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால் அதன் பின்னர் 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்கள் சரிந்தன.

பெத்தும் நிஸ்ஸன்க 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசையில் அஷுட்டோஸ் ஷர்மா 39 ஓட்டங்களையும் அணித் தலைவர் அக்சார் பட்டேல் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கார்த்திக் தியாகி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அன்குல் ரோய் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: பின் அலன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.