செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பஞ்சாபை வீழ்த்தி இறுதிச் சுற்று வாய்ப்பை டெல்ஹி ஓரளவு உயிர்பெறச் செய்துகொண்டுள்ளது

பஞ்சாபை வீழ்த்தி இறுதிச் சுற்று வாய்ப்பை டெல்ஹி ஓரளவு உயிர்பெறச் செய்துகொண்டுள்ளது

1 minutes read

தரம்சாலா விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (11) இரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான  ஐபிஎல் போட்டியில் 3 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி தனது இறுதிச் சுற்று வாய்ப்பை ஓரளவு உயிர்பெறச் செய்துகொண்டுள்ளது.

இந்த வெற்றியுடன் 12 போட்டிகளில் 10 புள்ளிகளைப் பெற்று 7ஆம் இடத்தில் இருக்கும் டெல்ஹி கெப்பிட்டல்ஸின் இறுதிச் சுற்று வாய்ப்பு மற்றைய அணிகளின் போட்டி முடிவுகளில் தங்கி இருக்கிறது.

பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் டேவிட் மில்லர். அணித் தலைவர் அக்சார் பட்டேல் ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் அணித் தலைவர் ஷ்ரயேஸ் ஐயர் ஆட்டம் இழக்காமல் 59 ஓட்டங்களையும் ப்ரியான்ஷ் ஆரியா 56 ஓட்டங்களையும் கூப்பர் கொனலி 38 ஓட்டங்களையும் சூரியான்ஷ் ஷெஜ் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மாதவ் திவாரி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டாக் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

211 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 19 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவர் அக்சார் பட்டேல் 56 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 51 ஓட்டங்களையும் அஷுட்டோஷ் ஷர்மா 24 ஓட்டங்களையும் மாதவ் திவாரி ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் யாஷ் தாகூர் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மாதவ் திவாரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.