செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

1 minutes read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக  லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) இரவு நடைபெற்ற மிக முக்கிய குழு 2 மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 38 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து ஒரு போட்டி மீதம் இருக்க அரை இறதியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றது.

லண்டனில் தற்போது நிலவும் கடும் உஷ்ணத்துக்கு மத்தயிலும் டெனி வியட் – ஹொஜ், ஹீதர் நைட் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களின் உதவியுடன் இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றது.

மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையாத போதிலும் டெனி வியட் – ஹொஜ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆது விக்கெட்டில் அலிஸ் கெப்சியுடன் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினார்.

டெனி வியட் – ஹொஜ் 42 பந்துகளில் 65 ஓட்டங்களையும் அலிஸ் கெப்சி 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசையில் ஹீதர் நைட் 26 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அஷ்மினி முனிசார் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீராங்கனைகள் 5 கடினமான பிடிகள் உட்பட 6 பிடிகளைத் தவறவிட்டனர். அந்தப் பிடிகள் எடுக்கப்பட்டிருந்தால் மேற்கிந்தியத் தீவுகள் குறைந்த எண்ணிக்கைக்கு ஆட்டம் இழந்திருக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் 10ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று நெருக்கடியை எதிர்கொண்டது.

ஜஸாரா க்ளெக்ஸ்டன், சினெல் ஹென்றி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

எனினும் மேற்கிந்தியத் தீவுகளின் தோல்வியை அவர்களால் தடுக்க முடியவில்லை.

சினெல் ஹென்றி ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் ஜஸாரா க்ளெக்ஸ்டன் 21  ஓட்டங்களையும் ஷேர்மெய்ன் கெம்பெல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சார்ளி டீன் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகி: டெனி வியட் – ஹொஜ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.