செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை நூலகம் எரிப்பு என்பது இனவாதத்தின் முதலடி | கேசுதன்

நூலகம் எரிப்பு என்பது இனவாதத்தின் முதலடி | கேசுதன்

2 minutes read

 

காலம் கடந்த நினைவுகளை புரட்டிப் பார்த்தால் பேரினவாத கும்பல்களின் அட்டுழியங்களே வரிசையாக உள்ளது. பதப்படுத்தி பாதுகாக்கப்பட்ட அரிய நூல்களை சுயநலத்திற்காகவும் இனவாததிற்காகவும் எரியூட்டிடப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.

1981 நூலகம் எரிப்பு என்பது இனவாதத்தின் முதலடி. வன்முறைகளை கட்டியெழுப்புவது சிங்கள அரசியல்வாதிகளின் தலையாய கடமையாகவே இன்றுவரை கட்டவிழ்த்து தான் காணப்படுகிறது. தெற்காசியாவின் உன்னத பொக்கிஷமாக காணப்பட்ட அரும்பெரும் தமிழ் நூல்களை பாதுகாத்த யாழ் பொது நூலகத்தை எரியூட்டியது அனைத்து மக்களின் அழியாத சான்றாகவே இன்றும் உள்ளது.
அன்றைய அரசியல் தலைவர்களின் இனவெறிச்செயல் (நூலகம் எரியூட்டப்பட்டது ) ஈழத்தமிழர் மத்தியில் அழியா காயங்கள் என்றே கூறமுடியும்.

சிங்கள அரசியலுக்கு எதிராக தமிழ் தேசிய போக்கிற்கு உரமூட்டி வளர்த்துவிட்ட கொடும் செயல் இதுவாகவே கருதமுடியும். தமிழ் மக்களையும் கலாச்சாரங்களையும் சிதைக்கும் வன்கொடுமை நூலக எரிப்பில் தொடங்கி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உலக நாடுகளின் பார்வை தமிழ் மக்களின் மீது திரும்புவதற்கு அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பேரினவாதமே மிக முக்கிய காரணம்.

யாழ் மக்களின் மன உளைச்சளை ஏற்படுத்திய அழிவு நூலக எரிப்பேயாகும். 2006 ம் ஆண்டில் அரசு தலைவர் மகிந்த ராஜபஷ கூறியது 1983ல் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மற்றும் படுகொலைகள் நூலக எரிப்புக்கு ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்பு என்றார் 2016ல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சி தலைவர் என்ற முறையில் நூலக எரிப்பிற்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் . அவரவர் சுயநலத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்டது தமிழ் சமூகமே. எரிப்பதும் நீரே! வருந்துவதும் நீரே என்றால் வலிப்பது யாருக்கு….

பல அரசியல் தலைமைகள் ஆட்சிக்கு வந்தாலும் ஒருவரையொருவர் சாடுபவர்களாகவே உள்ளனர். என்றாலும் தற்போதுள்ள அரச தலைவர் அநுர குமார திஸா நாயக்க அவர்கள் ஊழல் எதிர்ப்பாளராக களமிறங்கி தேர்தலில் வெற்றியீட்டினாலும் அன்றய கால கட்டத்தில் நூலக எரிப்புக்கு குண்டர்களை ஏவிவிட்டது இன்றய அரசாங்கம் என்பதில் மக்கள் மத்தியில் ஐயமில்லை.

தமிழ் இனத்தினை ஒடுக்கி அழிக்க வேண்டுமேயானால் முதலில் தென்பட்டது யாழ் நூலகம். 1981 ம் ஆண்டு தேர்தல்களை காரணம் காட்டி சிங்கள இராணுவம் பொலிஸ் பிரிவினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடுவே வன்முறையாளர்களும் புகுக்கப்பட்டனர். மே 31ம் திகதி குண்டர்களால் சிங்கள இனவாத கும்பல்களாலும் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. இதற்கு சித்தாந்தங்களின் படி ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்தும் தேர்தல்களை காரணம் காட்டியும் யாழில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தும் மூடி மறைக்க முடிவெடுத்தனர் .

சிங்கள வெறிபிடித்த காடையர்கள் இனவாத யுக்தியை கையாள்கிறது எனும் தொனிப்பொருளில் அறிவாலயத்தை எரித்தது பற்றி எந்த ஒரு காவல் நிலையத்திலும் புகார்கள் இல்லை.
அதுவரை காலங்களும் அமைதி விரவிய தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எண்ணெய் ஊற்றி எரியவிட்டது சிங்கள இனவாதம். நூல்களின் பெறுமதி அறியாத சமூகத்திற்கு நூலகத்தின் அருமை புரிந்திடுமா. இன்றும் தமிழ் இலக்கியங்களுக்கும் இலக்கியவாதிகளுக்கு விசாரணைகளும் மிரட்டல்களும் வந்தவண்ணமே உள்ளன.

தமிழீழ விடுதலை புலிகளை எண்ணெய் ஊற்றி எரிய விட்ட சிங்கள இனவாதம்
அன்றுவரை அமைதி விரவிய தமிழீழ விடுதலை புலிகளை ஆயுதம் ஏந்த வைத்தது சிங்கள அரசாங்கம். தமிழ் இலக்கியவாதிகள் பலர் எழுதிய நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டது. பல பெற்றுக்கொள்ள முடியா தமிழ் நூல்கள் ஓலைச்சுவடிகள் என பல்லாயிரம் நூல்களை தீக்குச்சிக்கு பலியாகியது. தமிழ் மக்களிடத்தே இலக்கியம் என்பது உணர்வுகளோடு ஒட்டியது. அவ்வாறான மக்களின் உணர்வுகளை உள்ளடக்கிய அறிவாலயம் யாழ் நூலகம். அதனை எரித்து சாம்பலாக்கி தமிழ் மக்களின் போராட்ட வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தற்கு மூல காரண கர்த்தா சிங்கள இனவாதம்.

தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகள் இன அழிப்பு நடவடிக்கைகள் என்பன தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கியது. இன்று இன அழிப்பிற்கு சான்றாகவும் யாழ் நூலகம் உள்ளது. பல்வேறு வன்முறையாளர்களை யாழ் நகருக்குள் அனுப்பி வைத்து தமிழ் மக்களை கொன்று குவித்தும் வன்செயல்களில் ஈடுபட்ட வைத்ததும் சிங்கள இனவாதம். கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்கு முறைகளுக்கு ஏற்ப்படுத்தி விடுதலை புலிகளை உருவாக்கியது சிங்கள ஆதிக்கம் பிடித்தவர்கள்.

இன அழிப்பில் இருந்தும் ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட விடுதலை வேண்டி நின்ற விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என்றால் உருவாகியது சித்தர்களா? சிங்கள வெறியர்களால் பயங்கரவாதிகள் என பெயர் சூட்டப்பட்டது தமிழீழ விடுதலை புலிகள் என்றால் சிங்கள பேரினவாதிகளுக்கு சூட்டப்படும் பெயர் தான் என்ன.

நூலகத்தை எரித்ததற்கு பழிவாங்கும் நோக்குடன் தமிழ் மக்கள் சிங்களவர்களின் காகிதத்தை கிழித்தார்கள் என்று கூறுவார் எவருண்டு. எரியாத நெருப்பை பற்ற வைத்த தீக்குச்சியும் அவர்களே. தீப்பிழம்பாய் உருவெடுத்ததும் அணைப்பதற்கு முயன்றால் முடியாத காரியம் தான். தமிழ் மக்களின் இன உணர்வை கேவலப்படுத்திய அரசியல் குடும்பங்கள் அன்றில் இருந்து இன்றுவரை உலாவித்தான் திரிகின்றனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More