Thursday, December 3, 2020

இதையும் படிங்க

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக தயாபரன் நியமனம்

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் அவர் இன்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டதுடன் அதற்கான நியமனக்...

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jaffna...

நிழலைத்தவிர ஏதுமற்றவன் | பிரான்சிஸ் கிருபா

பிரியங்களுக்காக இறைஞ்சுகிற பிரார்த்தனைமொழி கவிஞர் பிரான்சிஸ் கிருபாவி னுடையது. நிரந்தர வலியைச் சுமந்து நிற்கும் பாவம் கொண்ட முகத்தில், சுடர்போலப் பார்வையும் புன்னகையும் தீட்சண்யமாயிருந்தன....

மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்

இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...

ஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்

முகவுரை தமது  இனத்தின் உரிமைகளுக்குத்  தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம்  அவர்கள்  நினைவாக  தீபம் ஏற்றி...

நினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்! | முருகபூபதி

காலமும் கணங்களும் இன்று  டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் ! நினைவழியா...

ஆசிரியர்

தனி ஈழத் தீர்வைதான் வலியுறுத்துகிறது காஷ்மீர் | தீபச்செல்வன்

ladakh state க்கான பட முடிவு

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தமையை இலங்கை பிரதமர் வரவேற்றுள்ளார். லடாக் பகுதியை தனியான மாநிலம் ஆக்கியுள்ளதாகவும் இது பௌத்தர்கள் அதிகம் வாழுகின்ற பகுதி என்றும், இந்தியாவில் ஒரு பௌத்த மாநிலம் உருவாகியிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.  இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரமாகித் தொடரும் நிலையில் தமிழர்கள் தனி ஆட்சி கோரும் நிலையில் ரணில் இக் கருத்து விவாதத்திற்குரியது.

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின், மாநில அந்தஸ்து அல்லது சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உருவாகுவதற்கு முன்பே, காஷ்மீர் ஒரு தனியாட்சிப் பகுதியாக காணப்பட்டது. பழமையான மன்னர் சமஸ்தானமாகும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உருவாகிய காலகட்டத்தில் பகிஸ்தான் படையெடுத்து, காஷ்ரின் ஒரு பகுதியைக் கைபற்றியது. அதற்கு ஆஷாத் காஷ்மீர் என்று பாகிஸ்தான் பெயரிட்டுக் கொண்டது.

இந்த நிலையில், அன்றைய இந்தியப் பிரதமர் நேரு காஷ்மீருக்கு இராணுவப் பாதுகாப்பு அளிப்பதாகவும் விரும்பினால் இந்தியாவுடன் இணையலாம் என்றும் கூறினார். அத்துடன் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து கொண்ட ஒரு மாநிலமாக காணப்படும் என்று வாக்களிக்கப்பட்டு, இந்திய அரசியல் சாசனத்தில் 370ஆவது பிரிவு உருவாக்கப்பட்டது. காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைவதா? பாகிஸ்தானுடன் இணைவதா என்பதற்கு பொதுவாக்கெடுப்பு நடாத்தட்டது. அத்துடன் காஷ்மீர் தனக்கென தனியான கெடி, அரசியலமைப்பு, சிறப்பு அந்தஸ்து என்பவற்றைக் கொண்டு ஒரு தன்னாட்சி மாநிலமாக இருந்தது வந்தது.

kashmir க்கான பட முடிவு

அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி இந்த சட்டப் பிரிவை இரத்துச் செய்திருப்பது இந்தியா காஷ்மீர் மக்களுக்கு இழைத்துள்ள வரலாற்று துரோகமாகும். இந்தியா சட்ட ரீதியாக – ஜனநாயக ரீதியாக ஒரு இனப்படுகொலையை செய்திருக்கின்றது. காஷ்மீர் மக்களுக்கும் ஈழத்து மக்களுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. சிங்கள அரசை நம்பி, ஈழத் தமிழர்கள் அரசியல் அதிகாரங்களை இழந்ததுபோல் இந்திய அரசை நம்பி காஷ்மீர் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

ஈழத் தீவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரம் வழங்கியபோது,  தனித் தமிழ் நாடு ஈழத்தில் அமைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டிருந்தன. ஈழத் தமிழ் மக்கள் செறிந்து வாழும் அவர்களின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கை தனித் தமிழ் நாடாக பிரகடனப்படுத்தியிருக்கும் சூழல் ஏற்பட்டபோது, ஒன்றுபட்ட இலங்கைக்காக அன்றைய தமிழ் தலைவர்கள் பாடுபட்டனர். பின் வந்த வரலாற்றில் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டு, அவர்களின் நிலமும் அதிகாரமும் பறிக்கப்பட்ட நிலையில், தனித் தமிழ் நாட்டு வாய்ப்பை நழுவ விட்டதன் துர்பாக்கியத்தை உணர்ந்து கொண்டனர்.eelam க்கான பட முடிவு

பிரித்தானியர்களின் வெளியேற்றத்தின் பின்னர், சிலோன் சிங்கள நாடாக மாறியது. அன்று முதல் இன்று வரை ஈழத் தமிழ் மக்களை மெல்ல மெல்ல அழித்து ஒழிக்கும் வேலைகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகின்றது. இந்த சூழலில்தான் ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இன்றைய காலத்தில், குறைந்த பட்சம் இலங்கை அரசு வடக்கு கிழக்கை இணைக்கும் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கும் என்று கூறியே எமது தலைமைகளால் இன்றைய அரசுக்கு ஆதரவு வழங்கப்படுகின்றது.

இன்றைய அரச தலைவர்களோ, வடக்கு கிழக்கை இணைக்க மாட்டோம், சமஸ்டி – தன்னாட்சி அதிகாரத்தை வழங்க மாட்டோம் என்று மீண்டும் மீண்டும் அடித்துச் சொல்லுகின்றனர். தமிழர்களின் ஆதரவில் ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு, தமிழர்களுக்கு எதிராகவே இவ்வாறு பேசுகின்றது இன்றைய அரசு. தமிழ் தலைமைகளும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த சூழலில்தான் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தமைக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையில் காஸ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தமை ஈழத்தில் வடக்கு கிழக்கை இரண்டாக பிரித்தமைக்கு ஒப்பானது. நிலங்களை துண்டாடி தனிநாட்டுக் கனவுகளை இல்லாமல் செய்ய மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளே இவை. ஆனாலும் லடாக்கை பிரித்து தனியாக்குவதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் ரணில், வடக்கு கிழக்கை தனி மாநிலமாக – தேசமாக்குவதற்கும் எமது சுய நிர்ணய உரிமையை எம்மிடம் கையளிக்கவும் குழந்தை தனமான காரணங்களைக் கூறுகிறார்.

லடாக் பகுதி தனி மாநிலமாகியாக ரணில் கூறுகின்றார். ஆனால் லடாக் பகுதி சட்டப் பேரவையற்ற யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டுள்ளது. காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என்றும் இந்தியாவில் இருந்து காஷ்மீரை விடுவிக்க வேண்டும் என்றும் அங்கு குரல்கள் எழுந்து வந்துள்ள நிலையில், வரலாற்று ரீதியாக –சட்ட ரீதியாக அளிக்கப்பட்ட வாக்குறுதி அல்லது ஒப்பந்தம் அங்கே மீறப்பட்டுள்ளது.

இது தனித்தேசம் கேட்டு போராடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. குறையான தீர்வுகள் ஒருபோதும் பிரச்சினைக்கு தீர்வாகுவதில்லை. அத்துடன் அவை பாரிய ஆபத்துக்களாகவும் அமையும். உள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான விடுதலை என்பது ஈழத் தமிழர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை அனுபவத்தில் தற்காலிக சுயாட்சியின் மூலம், சிங்களப் பேரினவாதம் தன்னை உருமறைத்து, உறங்கு நிலையில் இருக்குமே தவிர, அழிந்து ஒடுங்கிவிடாது. இதுவே காஷ்மீரில் நடந்திருக்கிறது.

eelam க்கான பட முடிவு

இன்று இலங்கையில் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வதை கோருகின்ற செயல் எவ்வளவு ஆபத்தானது என்பதையே இன்றைய காஷ்மீர் நிகழ்வு உணர்த்துகின்றது. இது நாளை தமிழகத்திற்கும் இடம்பெறலாம் என்ற அச்சமும் தமிழ்நாட்டில் தோன்றியுள்ளது. ஈழத் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் தனி இராச்சியத்தை கொண்டிருந்தவர்கள். சிங்கள அரசு எமது உரிமைகளை தர இணங்காது என்றபோதே தனிநாடு கோரிய போராட்டம் துவங்கப்பட்டது.

இன்றைக்கு ஒன்றிணைந்த நாட்டுக்குள்கூட ஒரு அதிகாரப் பகிர்வை முன்வைக்க சிங்கள அரசுக்கு துளியளவும் விருப்பம் இல்லை. இப்படிப்பட்ட நாட்டில், இப்படிப்பட்ட ஆட்சியாளர்களின் மத்தியில் ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வை கோருவது மிகவும் ஆபத்தானது. நாளை பாராளுமன்ற சிங்களப் பெரும்பான்மை அதிகாரத்தை வைத்து தமிழர்களுக்கு வழங்கும் கொஞ்ச அதிகாரங்களையும் பிடுங்கிக் கொள்ளலாம். தலைவர் பிரபாகரன் எப்போதும் வலியுறுத்தியதைப் போல தனித் தமிழீழமே இப் பிரச்சினைக்கு தீர்வாகும். இன்றைய காஷ்மீரின் நிலைகூட தனிஈழத்தையே எமக்கு அவசியப்படுத்துகின்றது.

வணக்கம் லண்டனுக்காக தீபச்செல்வன்.

தீபச்செல்வன் க்கான பட முடிவு

கட்டுரையாளர் தீபச்செல்வன் ஓர் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர்.

 

இதையும் படிங்க

மன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு!

மன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.

லெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்!

உலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...

சசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...

யாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

புரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129ஆக...

நாட்டில் இன்றும் அதிக தொற்றாளர்கள் கண்டறிவு

நாட்டில் இன்று மட்டும் 627 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே...

தொடர்புச் செய்திகள்

பிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...

தனிநாடு கோருகிறாரா விக்கினேஸ்வரன்? | தீபச்செல்வன்

இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் வடக்கின் முன்னாள் முதல்வரும் நீதியரசருமான விக்கினேஸ்வரனுக்கு எதிராக கடும் அலை வீசுகின்றது. ஆனால் இந்த எதிர்ப்பு என்பது விக்கினேஸ்வரனுக்கு எதிரான எதிர்ப்பல்ல. ஈழத் தமிழ் மக்களுக்கும்...

பேரினவாதத்தை ஊக்குவிக்கும் எஸ்.பி.திசாநாயக்க

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலையில் இன்று...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி வீரருக்கு கொரோனா

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் மேலும் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய...

கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு

ரஷ்யாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு ஜனாதிபதி விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்...

தென் தமிழகம் நோக்கி நகா்கிறது ‘புரெவி’ புயல்!

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி வியாழக்கிழமை காலை நகரவுள்ளது. பாம்பன்-கன்னியாகுமரி இடையே...

மேலும் பதிவுகள்

கமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு!

சமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...

மண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்

நவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.

கவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்

வரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...

ஸ்ரீலங்கா இரண்டாகும் | சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

இறுதிப்போரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களை நினைவு கூர்வதற்கு தமிழ் மக்களுக்கு இடமளிக்காவிட்டால் ஸ்ரீலங்கா இரண்டாகப் பிளவடைவதை எவராலும் தடுக்க முடியாமற் போய்விடும்...

வவுனியா நெடுங்கேணியில் மீண்டும் கொரோனா தொற்றாளர்!

வவுனியா நெடுங்கேணியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தில்...

பிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி?

பிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.

பிந்திய செய்திகள்

மன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு!

மன்னாரில் இருந்து பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் தேக்கம் அணைக்கட்டின் ஊடாக கழிவு நீர் கடலுக்குச் செல்லும் பாதையில் சுமார் 10 அடிக்கு மேல் நீர் செல்கின்றது.

லெபனானுக்கான மனிதாபிமான நிதியை அறிவித்தார் மக்ரோன்!

உலக வங்கியால் வழங்கப்பட்ட லெபனானுக்கான மனிதாபிமான நிதியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். ஒகஸ்ட் மாதம் பாரிய பெய்ரூட் துறைமுக வெடிப்பை அடுத்து சர்வதேச...

சசிக்கலா விரைவில் விடுதலை செய்யப்படுவாரா

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர்...

யாழில் அனர்த்த நிலைமையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

புரவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து...

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129ஆக...

நாட்டில் இன்றும் அதிக தொற்றாளர்கள் கண்டறிவு

நாட்டில் இன்று மட்டும் 627 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே...

துயர் பகிர்வு