Wednesday, December 2, 2020

இதையும் படிங்க

மாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்! 9 வயது சிறுமி பரிதாபமாக பலி

பருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது!

இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...

மஹர சிறைச்சாலை மோதல் –உயிரிழப்புமற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 9 ஆக...

வடக்கில் இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி.கண்டனம்

வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார். நாடாளுமன்றில்...

ஆசிரியர்

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளை கொடூர கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பு

தாய்லாந்தில் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள் இருவருக்கு அந்த நாட்டின் அரசர் மன்னிப்பு வழங்கியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றிருந்த இருவரும் அரசரின் மன்னிப்பு ஆணையை அடுத்து ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தாய்லாந்தின் பிரபலமான சுற்றுலா தீவான கோ தாவோவில் பிரித்தானியாவின் ஜெர்சியைச் சேர்ந்த டேவிட் மில்லர் (24), நோர்போக்கைச் சேர்ந்த ஹன்னா வித்தரேஜ் (23) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பர்மிய தொழிலாளர்களான ஜா லின் மற்றும் வின் ஸா ஹ்டூன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டில் விசாரணை முடிக்கப்பட்டு இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் மரண தண்டனை பெற்ற பர்மிய குற்றவாளிகள் இருவரும் தாய்லாந்து அரசரிடம் மன்னிப்பு கோரி முறையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாய்லாந்து அரசர் குற்றவாளிகள் இருவரது மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார்.

மேலும் குறித்த குற்றவாளிகள் இருவருக்கும் நல்ல நடத்தை காரணமாக அவர்களின் சிறை தண்டனை காலத்தை குறைக்கவும் சட்டத்தில் இடமிருப்பதாக அவர்கள் சார்பில் வாதாடியுள்ள சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரித்தானியர்களான மில்லர் மற்றும் வித்தரேஜ் ஆகிய இருவரும் அடித்தே கொல்லப்பட்ட நிலையில் கடற்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

அத்துடன் உடற்கூறு ஆய்வில், வித்தரேஜ் பலாத்காரத்திற்கு இலக்காகியுள்ளதும் கண்டறியப்பட்டது.

இந்த வழக்கில் கைதான பர்மிய தொழிலாளர்கள் இருவரின் நண்பர்கள் வெளியிட்ட தகவல்கள் அப்போது விவாதத்தை கிளப்பியது.

மேலும் உயரதிகாரிகளின் கட்டாயத்தின் பேரில் இந்த கொலைப்பழியை அவர்கள் ஏற்க நேர்ந்தது என தெரிவித்திருந்தனர்.

அது மட்டுமின்றி, சர்வதேச பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க பொலிசாரும் கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என்றே சர்வதேச குற்றவியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும் , இதுவரை எத்தனை கொலைக்குற்றவாளிகளுக்கு தாய்லாந்து அரசர் மன்னிப்பு வழங்கினார் என்பது மர்மமாகவே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க

தொடர் வெற்றியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 8வது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி மற்றும் Kandy Tuskers அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ்ப்பாணம்...

ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்

LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .

பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா!

டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...

கமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு!

சமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...

தீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...

தொடர்புச் செய்திகள்

கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுவிஸ் அரசின் உறுதி முடிவு

இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தொடர்பில் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி எப்போது முதல் பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இன்று கொரோனா நிலவரம்

நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை 2,995 ஆக உயர்ந்துள்ளது. இன்று (29) ஆறு பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பிரித்தானியாவில் காணாமல் போன சகோதரர்கள் சடலமாக மீட்பு

பிரித்தானியாவில் கடற்கரையில் காணமல் போன இரண்டு சகோதரர்கள் பல மணி நேர தேடுதலுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவின் West Yorkshire-ன் Dewsbury பகுதியை சேர்ந்த...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்க தென் கொரியா ஆளும் கட்சி அழைப்பு!

நோய்த்தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பிய பின்னர், தென் கொரியாவின் ஆளும் கட்சி நாட்டிற்கு மில்லியன் கணக்கான கூடுதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை...

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை...

கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை

நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவுகள்

அங்குணுகொலபெலஸ்ஸ கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரை மீதேறி நேற்று முந்தினம் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்றும்(புதன்கிழமை) தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் சிலரை...

அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை யாழில் கைது

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.50...

இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்!

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான...

புறக்கோட்டையில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்கு முற்றாக முடக்கம்

கொழும்பு- புறக்கோட்டை வழமைக்கு திரும்பினாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை

நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக தேர்வான ஜல்லிக்கட்டு

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம்...

பிந்திய செய்திகள்

தொடர் வெற்றியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 8வது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி மற்றும் Kandy Tuskers அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ்ப்பாணம்...

ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்

LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .

பிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி?

பிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.

பாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு!

பிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...

பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா!

டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...

துயர் பகிர்வு