59 கோடி ஊழல் செய்த சீனா அமைச்சருக்கு மரண தண்டனை

சீனாவில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சுமார் 59 கோடி ரூபாய் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பெற்ற குற்றத்திற்காக அந்நாட்டு முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஃபூ ஜெங்குவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


சினாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள மக்கள் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தன்னுடைய பதவி காலத்தில் நேரடியாகவும், தனது உறவினர்கள் மூலமாகவும் அவர் முறைகேடுகளை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


வர்த்தகங்கள் மற்றும் வழக்குகளில் மற்றவர்கள் பயனடையும் வகையில் அவர் செயல்பட்டதாகவும், இதன் மூலம் அவர் ஆதாயம் பெற்றதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.

இருப்பினும் மரண தண்டனையை நிறைவேற்ற அவருக்கு 2 வருட காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்