செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சீனா திடீர் முடிவுகளை எடுக்க காரணம் என்ன

சீனா திடீர் முடிவுகளை எடுக்க காரணம் என்ன

1 minutes read

சீனா திடீர் என்று உக்ரைனுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக தமது நாட்டின் தூதுவர்களை உக்ரைனுக்கு அனுப்பி வைக்க உள்ளது.

ரசிய உக்ரைன் போர் 1 1/4 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த போர் விடயத்தில் சீனா திடீர் அக்கறையை காட்ட ஆரம்பித்துள்ளது. குறுகிய  காலத்தில் சீனா ரசியாவுடன் நல்ல நட்பு நிலையை பேணி வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் தாய்வானுக்கு சீனா கை வைக்க  முயற்சிக்கும் போது உதவிக்கு அமெரிக்கா நிச்சயம் வரும் அப்போது அமெரிக்காவை எதிர்க்கும் வல்லமை உள்ள ஒரே நாடு ரசியா மாத்திரமே எனவே எதிர்கால திட்டத்தை கருத்தில் வைத்தே  இந்த உறவு பாலத்தை வலுவாக்கியுள்ளது சீனா .

இந்த சமயத்தில் தான்  உக்ரைன் அதிபருடன் 1/2 மணித்தியாலங்களுக்கு மேல் சீனா அதிபர் தொலைபேசியில் உரையாற்றி உள்ளார். அந்த உரையாடலில்  இப்போது நடக்கும் போர் நிறுத்தங்களை பற்றியும் ரசியாவுக்கு சார்பான சில விடயங்களை பற்றியும் பேசப்பட்டதாக  அந்த நாட்டு ஊடகங்கள்  தகவல் வெளியிட்டுள்ளது.

அதன் பின்னரும்  இந்த விடயத்தில் முழு மூச்சாக செயற்படும் நோக்கில் சீனா தமது மூன்று தூதுவர்களை உக்ரைன் அனுப்ப உள்ளது . இவர்களது இந்த செயற்பாட்டுக்கு  பிரான்ஸ் அதிபர் மெக்ரோன்  சொந்த  நாட்டில் பிரச்சனை நடந்து வரும் சூழலிலும் எல்லாப்பக்கமும் அமைதியை விரும்புகிறோம் என்கிறார். அதை போலவே இந்த பேச்சிவார்த்தைக்கு ரஷிய வெளிவிவகார துறை அமைச்சர் வரவேற்பு வழங்கியுள்ளதுடன் , அமெரிக்கா நாமும் எல்லாவற்ரையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றோம் நல்லது நடந்தால் நல்லதே என்று கூறியுள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.