June 4, 2023 10:10 pm

பிரபல செய்தி நிறுவனம் பிபிசிக்கு ரூ.10,000 கோடி அபராதம்?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
பிரபல ஊடக நிறுவனம் பிபிசிக்கு 10000 கோடி அபராதம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்த பிரபல செய்தி ஊடகமான பிபிசிக்கு 10,000 கோடி இந்திய ரூபாய் கேட்டு அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் சார்பில் இந்த வழக்கு பதிவாகியுள்ளது.

பிரதமர் மோடியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க எடுக்கப்பட்டதாக அந்தப் படம் மீது மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிபிசி தயாரித்த அந்தத் திரைப்படம் மத்திய அரசிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்தது. காலனிய மனநிலையுடன் தயாரிக்கப்பட்ட படம் என்று சர்ச்சைகள் எழுந்தன.

இதனிடையே, ஆவணப்படம் தொடர்பான வழக்கில் பதில் அளிக்க பிபிசிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்