செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா நிலத்தடி நீரை எடுப்பதால் பூமி சாய்கிறது; விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

நிலத்தடி நீரை எடுப்பதால் பூமி சாய்கிறது; விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

1 minutes read

நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதால் பூமி சாய்ந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருவதால், நாம் வாழும் பூமி 1993 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்டிமென்டர் கிழக்கே சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பூமியின் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

1993ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை மட்டும் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்பட்டுள்ளது. இது 6 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் குறைவது பூமியின் சுழற்சியை மாற்றுவதாக 2016ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். ஆனால், தற்போதுவரை இந்த சுழற்சி மாற்றங்களுக்கு நிலத்தடி நீரின் குறிப்பிட்ட பங்களிப்பு ஆராயப்படவில்லை.

1993 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா ஆகிய நாடுகளில், மத்திய அட்சரேகைகளில் அதிகளவு நீர் மறுபகிர்வு செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

பூமியின் சுழற்சி பெரிதும் மாறியுள்ளதாகவும் இதன்மூலம் பூமியின் பல்வேறு பகுதியில் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More