அமெரிக்காவில் கொடி கட்டி பறக்கும் கலாச்சாரத்தில் ஒன்று துப்பாக்கி சூட்டு கலாச்சாரம் . இவ்வாறான ஒரு சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
மிசவுரி கன்சாஸ் நகரின் டவுன்டவுனில் இந்த அவலம் நடந்துள்ளது . வாகன நிறுத்துமிடத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் பொலீசார் விரைந்தனர்.
அங்கு, துப்பாக்கிச்சூடு காயங்களுடன் 8 பேர் கிடந்தனர். இதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.