December 7, 2023 7:53 am

மர்லின் மன்றோவின் வீட்டை இடிக்க தற்காலிக தடை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
மர்லின் மன்றோவின் வீட்டை இடிக்க தற்காலிக தடை

பிரபல ஹாலிவுட் நடிகை மரிலின் மன்ரோ. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள வீடு ஒன்று மட்டுமே மரிலின் மன்ரோக்குச் சொந்தமாக இருந்தது.

அந்த வீட்டில்தான் அவர் தனது 36ஆவது வயதில் மரணித்தார்.

இந்நிலையில், வீட்டின் புதிய உரிமையாளர் அதை இடிக்க விண்ணப்பம் செய்துள்ளார்.

எனினும், அதற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வீட்டைக் காப்பாற்றுமாறு நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது, அவ்வீட்டின் வரலாறு கருதி அதைப் பாதுகாக்க பல விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த வீடு இடிக்கப்படுவது தற்போதைக்குத் தடுக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலஸ் நகர் விண்ணப்பத்தை தொடர்ந்தும் மதிப்பிடுகிறது.

மரிலின் மன்ரோ குறித்த வீட்டை 75,000 டாலருக்கு வாங்கியுள்ளார். 1962ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அவர் வீட்டின் படுக்கை அறையில் இறந்துகிடந்தார்.

மரிலின் மன்ரோ தனது வீட்டிற்கு “Cursum Perficio” என்று பெயரிட்டிருந்தார். அதன் அர்த்தம் “என் பயணம் இங்கு முடிகிறது” என்பதாகும்.

மூலம் : The Guardian

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்