செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் காஸாவின் வட பகுதியில் இன்று கடும் தாக்குதல்

காஸாவின் வட பகுதியில் இன்று கடும் தாக்குதல்

0 minutes read

காஸாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் இன்று (30) கடுமையான தாக்குதல்களை நடத்தியதாகப் பாலஸ்தீனர்கள் தெரிவித்தனர்.

கவச வாகனங்கள் அந்தப் பகுதிக்குள் நுழைந்து நிலவழித் தாக்குதல் நடத்தின.

அதையொட்டி, காஸா மக்களைப் பாதுகாக்க அனைத்துலக அளவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

காஸாவின் ஷிஃபா, ஆல்-கூட்ஸ் மருத்துவமனைகளுக்கு ஆகாயத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இன்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் குறித்து ஹமாஸ் குழுவினரோ இஸ்ரேலிய இராணுவமோ கருத்துத் தெரிவிக்கவில்லை.

Reuters செய்தி நிறுவனத்தாலும் தகவல்களை உறுதிசெய்ய முடியவில்லை.

தொடர்புடைய செய்தி :  24 மணி நேரத்தில் காஸாவில் 700க்கும் மேற்பட்டோர் பலி!

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்தியது.

அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் தற்போது காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.