உத்தர பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தியா, உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவில் ஹர்மிலாப் பில்டிங் என அழைக்கப்படும் கட்டிடம், நேற்று மாலை 5 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது.
மேலும், இக்கட்டிடம் இடிந்து விழும் வேளையில், இடித்தளத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
கட்டிட விபத்தில் சிக்கியவர்கள் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.